Thursday, October 27, 2011

செல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள்




மும்பை நகரில் 4-4-2011 அன்று குழந்தைத் திருமணங்கள் எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணையத்த்தின் தலைவர் (Chairperson, National Commission for Women) கிரிஜா வியாஸ் அம்மையார், நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் திருமணங்களில் 73% குழந்தைத் திருமணங்களே என்றும் இந்தியாவிலேயே அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடக்கும் மாநிலம் இது தான் என்றும் அவர் கூறினார். இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து பீகார், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்கள் உள்ளன என்றும் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் குழந்தைத் திருமணங்கள் கணிசமான அளவில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாக இருக்கலாம்.

ஆனால் இச்செய்தியை அமாவசை அலைக்கு ஒப்பிட்டால் சுனாமி அலையைப் போன்று அதிர்ச்சி தரக் கூடிய இன்னொரு செய்தியையும் அவர் கூறினார். அது தான் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகின்றன எனும் செய்தி.

பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் சட்டம் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகிறது என்றால் அது எப்படி?

இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம், அண்ணல் அம்பேத்கரின் சுதந்திரமான படைப்பு அல்ல என்பதையும், அண்ணலின் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டன என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளாத பல அம்சங்கள் திணிக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடப்பில் உள்ள எல்லாச் சட்டங்களும், இந்தச் சட்டம் (இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம்) நடப்புக்கு வந்த பிறகு செல்லுபடியாக மாட்டா என்று அண்ணல் முன்மொழிந்தார். ஆனால் இராஜேந்திரப் பிரசாதும், நேருவும், மற்ற பார்ப்பனர்களும், பழமைவாதிகளும் அதை நிராகரித்து விட்டனர். இது போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில் தான் "இந்த அரசமைப்புச் சட்டத்தை நான் எழுதியதாக நண்பர்கள் கூறினார்கள். இதை எரித்துச் சாம்பலாக்கிடவும் நான் முதலாவது ஆளாக இருப்பேன்" என்று 2-9-1953 அன்று மனம் வெதும்பியும் துணிவுடனும் கூறினார்.

இப்பொழுது நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் "இப்போது நடப்பில் உள்ள சட்டத்தை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது" (Nothing in this article shall affect the operation of any existing law) என்றும் "இப்போது நடப்பில் உள்ள சட்டங்கள் இனிமேலும் தொடர்ந்து செல்லுபடியாகும்... (continuance in force of existing laws...) என்றும் விதிகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் "இந்த விதியில் இப்போது நடப்பில் உள்ள சட்டம் என்பது எதைக் குறிக்கிறது என்றால் - இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், அதிகாரம் வாய்ந்த ஒரு சட்ட மன்றத்தாலோ, வேறு அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு இருந்து அப்படிப்பட்ட சட்டம் ஏற்கனவே நீக்கப்படாமல் இருந்தால், அது இன்றும் செல்லும்" என்று விளக்கம் வேறு தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. இவற்றிற்கு எல்லாம் என்ன பொருள்?

இந்தப் பின்னணியோடு குழந்தைத் திருமணப் பிரச்சினைக்கு வருவோம். இப்போதைய திருமணச் சட்டம் பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் திருமண வயது 21 என்றும் வரையறுத்து இருக்கலாம். ஆனால் 1929 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டத்தில் பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது 14 என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆகவே 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் யாரும் இது வரைக்கும் சாரதா சட்டத்தை எந்த சட்ட மன்றமோ நாடாளுமன்றமோ செல்லாது என்று நீக்கவில்லையே; ஆகவே அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது; அதன்படி 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்படி செல்லும் என்று வாதிட்டால் நீதிமன்றம் ஒப்பக் கொள்ளும். (எனக்குத் தெரிந்து சாரதா சட்டத்தை மேற்கோள் காட்டி இருக்கிறேன். இத்துறை நிபுணர்கள் இன்னும் எத்தனை/எத்தகைய சட்டங்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறார்களோ; தெரியவில்லை)

இதே விதிகளின்படி தான் பாபர் மசூதி வழக்கில் இந்திய மக்கள் - ஏன் உலக மக்களே - அதிர்ச்சியடையும்படியான தீர்ப்பு வந்தது. கோவில்களில் சாதி வேற்றுமை பார்க்காமல் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பை வாங்கி வருவதும் இவ்விதிகளின் படிதான். உடன்கட்டை ஏற்றிவிடும் "மகா புண்ணியவான்களை" இவ்விதிகளின் படி தான் மேலும் புண்ணியத்தைச் சேர்க்க விடுதலை செய்து அனுப்பி வைக்கிறார்கள். மொத்தத்தில் பழைய மனு (அ)நீதியை நம் மீது திணித்து நம்மை அடிமைகளாக வைத்திருப்பது இவ்விதிகளின் மூலமாகத் தான்.

ஆனால், பழைய சட்டங்களைச் செல்லாததாக்குவதற்கு அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எந்த அரசியல்வாதியும் அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. பொது மக்கள் ஓட்டுக்காகத் தங்களை நாடி வரும் அரசியல்வாதிகளிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு அறிவு ஜீவிகள் இதைப் பற்றிய விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும். இப்பணி நிறைவேறாத வரையில் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை.

இராமியா
(சிந்தனையாளன்) க்கு

Wednesday, October 12, 2011

பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்



Posted on ஜனவரி 19, 2011 by monikhaa & tharmini| மறுமொழியவும்
பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா


25 நவம்பர் பெண்கள் மீதான வன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு கணக்கெடுப்பை செய்திருந்தன. அக்கணக்கெடுப்பின் போது தெரிய வந்த சில தகவல்கள்.பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தினமும் 200 பெண்கள் தினமும் பல பெண்கள் யாரோ ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பெரும்பாலும் யார் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் சட்டத்தின் முன் முறைப்பாடு செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் எனும் குற்ற உணர்வு காரணமாக இன்னமும் தயங்குகிறார்கள் என பெண்கள் சார்பாகவும் பெண்களின் மீது வன்முறையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக போராடும் பாதுகாப்பு சங்கத்தின் CFCV தலைவியும் மருத்துவருமான Emmanuelle Piet கூறுகிறார். நடைபெறும் பாலியல் வல்லுறவுகளில் நாலில் மூன்று தெரிந்த ஒருவராலேயே இழைக்கப்படுகிறது என்பது தான் கொடுமையானது. அவ்வன்முறையை செய்பவன் தகப்பனாகவோ,மாற்றாந்தகப்பனாகவோ மாமனாகவோ, ஆசிரியனாகவோ,மருத்துவனாகவோ, முதலாளியாகவோ, வேலைகொடுப்பனாகவோ இருக்கிறான் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள். ஏழு நிமிடத்திற்கு ஒரு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்படும் பத்துப் பெண்களில் ஒருவரே முறைப்பாடு செய்கிறார். ஆயினும் குற்றவாளிகள் ஒரு வீதம் அல்லது 2 வீதமே தண்டனை பெறுகிறார்கள் எனவும் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். கடந்த 2009 இல் 160 பெண்கள் கணவன்மார்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஆயிரக்கணக்கான பெண்கள் அடி, உதை ,சித்திரவதை என கணவர்களால் அனுபவிக்கிறார்கள் எனவும் பெண்கள் பாதுகாப்புச் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வன்முறைக்கு உள்ளாகின்றவர்கள் தாமாக முன் வந்தால் தாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவ் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு அமைப்பு (Viols Femmes Informations)
தொலைபேசி எண்: 0 800 05 95 95 (அழைப்பு இலவசம்)

நன்றி :ஊடறு


பூகோளமயமாக்கலும் பெண்களும்


சந்திரலேகா கிங்ஸ்லி இலங்கை மலையகம்


‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். எதிர்ப்புக் குரலை பலர் கேலியாகவும் கிண்டலாகவும் நோக்கினாலும் உள்ளார்ந்த உணர்வில் ‘ஹேபல் உற்பத்திகளையும் மருந்தடிக்காத பழக்கங்களையும் வீட்டுத் தோட்ட கீரையையும் விரும்பி நாடுவது என்பதும் ஆச்சரியப்படாத உண்மைகளாகும்.


இன்றைய காலகட்டம் ‘பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாக்கலின் யுகம்’ எனக் குறிப்பிடக்கூடியளவில் பூகோளமயமாக்கலும் பெண்களும்கோளமயமாக்கலின் நிகழ்ச்சி நிரல் உலக வரலாற்றில் மனித குல வாழ்வின் சகல அம்சங்களிலும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் உச்சமான காலப் பகுதியாக காணப்படுகின்றது. பூகோளமயமாக்கலும் பெண்களும்கோள மயமாக்கலின் மூலம் ஏற்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப புரட்சியும் வளர்ச்சியும் மனித குல அபிவிருத்தியை உச்சமாக எடுத்துக் காட்டி புகழ்ந்தாலும் மனித குல வரலாற்றின் இருப்பிற்கு அது பெரும் சவாலாக அமைந்துள்ளதென்பதனை மறுக்கவோ மறக்கவோ முடியாது.

வாழ்வின் சகல ஆதாரமான விடயங்களிலும் ஏகாதிபத்தியத்தின் பூகோளமயமாக்கலும் பெண்களும்கோள மயமாக்கல் நிகழ்ச்சி நிரல் மிக விவேகமாகவும் தந்திரமாகவும் உட்புகுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் எதிர்காலத்தில் புகுத்தப்படும் பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாதலை தவிர்த்து நம் வாழ்வை வெற்றி கொள்ள இயலாது என்ற மனநிலை பரவலாகக் காணப்படுகின்றது.பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாதல் விடயங்கள் நம் வாழ்வியலோடு கலவாதுவிடின் நம் வாழ்வு பூபூகோளமயமாக்கலும் பெண்களும் பூஜ்ஜியமாகிவிடுமோ அர்த்தமற்றதாகி விடுமோ என்ற சிந்தனை மாய உலகுக்குள், மாய வலைக்குள் மனிதனை ஆட்டிப் படைத்திருப்பதாய் இருப்பதிலும் பொய்யில்லை.

மனித குலம் இருக்கும் வரையில் உற்பத்தி சாதனங்களின் பெறுமதியும் வழங்கப்படும்சேவைகளின் பெறுமதியும் உயர்வானதாக மதிக்கப்படல் Nவுண்டும். அவ்வாறான சிந்தனை ஏகாதிபத்திய முதலாளித்துவ சிந்தனையையும் முதலாளித்துவ சுரண்டலையும் நீக்கி சமத்துவம், சமநீதி, செழுமை என்பவற்றை வாழ்வில் ப+க்கச் செய்வதும் உறுதியானது. அது வர்க்க முரண்பாட்டைமாற்றுவதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கமுமாகும். பூகோள மயமாக்கலின் உற்பத்தி சாதனங்களின் பெறுமதியும் சேவைகளின் பெறுமதியும் அர்த்தமற்றதாக்கிவிட்டு அதன் ஒப்பற்ற பெறுமதியும் ப+கோள மயமாக்கலின் வேறு விடயங்கள் கைப்பற்றியிருப்பது மனிதகுல வரலாற்றின் மாண்புக்கு வந்த மிகப் பெரிய கெடுதியாகவே கொள்ள முடியும்.

மனித குலத்துக்கான இச்சவால்களை வென்றெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மனிதனை நேசிக்கும், உலகை நேசிக்கும், உயிர்களை காதல் செய்யும் இயற்கையை மேலாக மதிக்கும்சிந்தனை கொண்ட யாவரினதும் பெரும் பிரயத்தனமாய் உயிர்த்தாகமாய் காணப்படுகின்றது.
இன்றைய நாளில் எம்முடைய வாழ்வுடன் தொடர்புபடும் வாழ்வியற் சாதனங்கள் தொடக்கம் வாழ்வியள்முறைகள் வரையிலான அனைத்தும் பூகோளமயத்தின் தொடர்புடைய நிகழ்ச்சி நிரலுடனே தொடர்புபட்டபவையாக காணப்படுகின்றது. எமது உணவு முறைகள், உடைகள், கலாசார பண்பாட்டு விடயங்கள், பழக்கவழக்கங்கள், வீடமைப்புகள், வாசிப்புகள், தகவல் பரிமாற்றம், மருத்துவ முறைகள், குழந்தை வளர்ப்புகள், அலங்காரங்கள், பொழுதுபோக்குகள், உபகரணப்பாவனைகள், கற்றல் சாதனங்கள், விளையாட்டுப்பொருட்கள், அணிகலங்கள், சிந்தனை முறைகள் என்பன யாவற்றிலும் பூகோளமயமாக்கலின் தலையீடு நம்மை தெரிந்தோ தெரியாமலோ ஆட்கொண்டிருக்கின்றான.

‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். எதிர்ப்புக் குரலை பலர் கேலியாகவும் கிண்டலாகவும் நோக்கினாலும் உள்ளார்ந்த உணர்வில் ‘ஹேபல் உற்பத்திகளையும் மருந்தடிக்காத பழக்கங்களையும் வீட்டுத் தோட்ட கீரையையும் விரும்பி நாடுவது என்பதும் ஆச்சரியப்படாத உண்மைகளாகும். எனவே நேர்மையாக இதற்கான குரலை உயர்த்த முடியாதெனின் மனுக்குல வரலாற்றுக்கு துரோகம் இழைத்த பட்டியலில் நாமே இருப்போம்.
வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களும் நம்மிடையே தெரிந்தும் தெரியாமலும் பூகோள மயமாக்கல் தொடர்புபடுவதை கூர்ந்து நோக்குவதில் எமது கருத்தியலை செலுத்துவது நமது தார்மீக கடமையாகும். பூகோள மயமாதலின் ஈர்ப்பு ஆண்களை விட பெண்களே அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர் என்பது பொதுக்கணிப்பு. வாழ்வியலின் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், தொடர்பு சாதனங்கள், உபயோகப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள் என்பன பெண்களாலேயே குடும்பச் சூழலிலேயே பெரும்பாலும் அறிமுகஞ் செய்யப்படுகின்றது.

பெண்கள் பொதுவாக எளிதில் ஏமாந்து விடுபவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள், அறிவீனமானவர்கள், தைரியமற்றவர்கள், சடுதியில் சலனமடையக் கூடியவர்கள், பயந்தவர்கள் என்ற நிலைமையிலான கருத்தியல்கள் நம் மத்தியில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் நிலவக் கூடியனவாகும். இவ்வாற பேசப்படும் கருத்தியங்களுக்குரிய சாதக பாதகங்கள், சரி பிழைகள் ஒருபுறமிருக்க அவ்வாறான தோற்றப்பாட்டுடனேயே பெண்கள் தம்மை சூழ வாழ்வியலை அமைத்துக் கொண்டுள்ளமையையும் நாம் அவதானிக்க முடிகின்றது.
சமூகத்தில் ஒரு பெண் மேற் செய்யப்பட்ட வடிவமைப்பிலே செதுக்கப்பட்டிருப்பதும் கூறுவதும் பரிதாபத்துக்குரிய விடயமே. சமூக கண்ணோட்டத்தில் ஆண்ஃபெண் சமூக நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், அரச சார்பான சார்பற்ற நிறுவனங்கள் யாவும் பெண்ணை நோக்குகின்ற விதமும் பாவ பரிதாபமாகவே காணப்படுகின்றது. இவற்றை உடைத்தெறிய அவள் தனக்குள்ளே உருவாக்கும் கருத்தியல்கள் மிகுந்த பலமானவையாக காணப்படுதல் அவசியமாகும். கருத்தியல்களில் பண்பாட்டை சரியான ரீதியில் கட்டியெழுப்பக் கூடியனவாகவும் காணப்படல் வேண்டும்.

பூகோள மயமாக்கல் சூழலில் இப்பண்பாட்டு அம்சங்கள் கூட பாதுகாக்கப்பட்டு புதிய வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய விடயம் ஒன்றை உள்வாங்குதல் பயன்படுத்தல் பற்றிக் கொள்ளுதல் என்பனவும் சீக்கிரமாக பெண்களிடத்தில் காணப்படுவதினை அவதானிக்க முடிகின்றது.

பூகோள மயமாக்கல் நமது உணவு பழக்கவழக்கங்கள் உணவுப் பண்பாடு என்பவற்றில் செலுத்தியுள்ள தாக்கம் அதீதமானது. புதிய புதிய உணவு முறைகள், புதிய தயாரிப்புகள், தீடீர் உணவு பக்கற்றுகள், கவர்ச்சிகரமான உணவு பொதிகள், கலப்பு உணவுகள், உள்ளடக்கம் தெரியாத உணவு, மிக நீண்ட நாட்களுக்கு பாவிக்கும் (வருடக் கணக்கில்) உணவு வகைகள், குளிர்பான வகைகள், இனிப்பு வகைகள் என்பன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைக்கக்கூடியனவாக காணப்படுகின்றன. பொதுவாகவே இவை மேலேத்தேய நிறுவனங்களால் உள்நாட்டிலும் உள்நாட்டு நிறுவனங்களாலும் தயாரிப்பு செய்பனவாக காணப்படுகின்றது.
இவைகள் பிள்ளைகள் தொல்லை, வேலைப்பளுவைக்குறைத்தல், வாய்க்கு ருசி, உள்ளடக்கம் தேட முனையாமைஎன்பவற்றின் அடிப்படையில் மிக இலகுவாக பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கின்ற படியினால் அவற்றின் மீதான நாட்டம் அதிகரித்தே காணப்படுவதினை நாம் அவதானிக்க முடிகின்றது. புதிய தயாரிப்புகளை வழங்குகின்றோம் அறிமுகம் செய்கின்றோம் என்பதைவிட நலமானதை சுவையானதை ஆரோக்கியமானதை தெரிவு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பெண்ணுக்குரியதாகும்.

பெருந்தோட்ட பெண்களை விட உழைக்கும் மத்திய தர வர்க்கத்தினரை சார்ந்த பெண்களே பூகோளமயமாதலின் விளைவில் தோன்றிய அநேக உணவுப்பண்டங்களை அறிமுகம் செய்வதிலும் உண்ணக் கொடுப்பதிலும் மிக வேகமாக இருக்கின்றார்கள்.

வேலைப் பளு உடலையும் உணர்வையும் அழுத்தும் பொழுதுகளில் கை கொடுக்கும் சுப்பர் மார்க்கெட்டுக்கள் கவர்ச்சியுடனே நோய்களையும் பாதுகாப்பினமையையு; வரவிற்கு மீறி செலவுகளையும் வாழ்க்கைப்பன்பை தொலைக்கவும் எளிமையை இழக்கவும் சுயத்தை மறக்கவும் சுலபமாக சொல்லித்தருகின்றன எனவே இனியாவது ப+கோளமயத்தினால் பூமிக்கு வந்த யாவற்றையும் சரியான கருத்தியலாள் வென்றெடுக்க கற்றுக் கொள்வோம்.


உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்



இவள் பாரதி ((நன்றி தடாகம்.கொம்)

தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.

காலம் மாறும் போது போராட்டத்தின் வடிவங்களும், முறைகளும் மாறலாம். ஆனால் போராட்டக் குணமும், நோக்கமும் மாறுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னளவில் போராட்டத்திற்கான முன்னெடுப்புகளை செய்திருக்கிறார்கள். செய்யத்தூண்டப் பட்டிருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கான அனைத்து நியாங்களும் கிடைக்க வேண்டி அசாதாரண வாழ்க்கை முறையை வாழ முன்வருகிறார்கள். அந்த போராட்டத்தின் விளைவாக கிடைக்கக்கூடிய பலனை மக்களுக்கே அளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற உரிமைகளைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அடிகோலுகிறார்கள்.

தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.


வங்காரி மாதாய் – சுற்றுச்சூழல் பாதுகாவலர் :

2004ல் உலக நாடுகள் உற்றுக் கவனித்த பெயர். நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி. நிலைத்த மேம்பாடு மற்றும் அமைதிப் பணிக்காக இவ்வுயரிய விருதைப் பெற்ற மாதாய் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, கென்யா நாட்டைச் சேர்ந்த இவர் எம்.பியாகவும் இரண்டு வருடங்கள் சேவையாற்றிருக்கிறார்.
நாற்பத்தைந்து பேருடன் பதினைந்து பிரதேசங்களுக்குச் சென்று மண் மற்றும் காலநிலைகளில் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்தியவர். பல கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டையும் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். முப்பது மில்லியன் மரக்கன்றுகளை நட்டு ஆப்பிரிக்க மண்ணிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை செய்திருப்பவர். பூமிக்கு புதிய சுவாசப்பையை நிர்மானித்தவர். சரியான திட்டமிடுதலும், தொலை நோக்குப்பார்வையும், எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன.

உலகமே முட்டாள்கள் தினம் என்று கொண்டாடும் தினத்தில் தான் 1940-ல் பிறந்தார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்த காடுகளின் தாய். தற்போது எழுபது வயதாகும் வங்காரி மாதா தன் செயல்பாடுகளால் தனக்குப் பின்னும் இயங்கக்கூடிய ஒரு வலுவான சூழலை மக்களிடம் விதைத்திருக்கிறார். பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெறாமல் ஆகப் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை இவரது செயல்பாடு தெளிவாக்குகிறது

வங்காரி மாதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவருக்குக் காயத்திற்கு பதிலாக இன்னும் உதவேகமாக செயலாற்றும் தன்மையை வழங்கியிருக்கிறது. ”வங்காரி மிகவும் வலிமையான பெண். இவரை என்னால் கட்டுபபடுத்த இயலவில்லை. எனவே எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுகிறேன்” என்று வங்காரியின் கணவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்தியவுடன் Mathai என்ற பெயரில் a சேர்த்து Maathai என்று வைத்துக் கொண்டார். மணவிலக்கு பெற்றபின் எக்கனாமிக் கமிஷனில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையில் ஆப்பிரிக்க நாடு முழுக்க பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தனது இரு குழந்தைகளையும் தனது முன்னாள் கணவரிடம் ஐந்து வருடங்கள் ஒப்படைத்துவிட்டு தனது பணியை தொய்வின்றி செய்ய ஆரம்பித்தார்.

கென்ய பெண்களின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்தவர் அம்மக்களிடம் இருக்கும் படைப்பார்வத்தையும், தேவைகளையும் கண்டறிந்து மரக்கன்றுகளை நடுவதென தீர்மானித்து வனத்துறை அதிகாரிகளை நாடியிருக்கிறார். அதிகாரிகள் என்றாலே அகராதியில் காரியவாதிகள் என்று பொருள் போலும். முதலில் மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக ஒத்துக் கொண்டவர் பின்னர் பணம் கொடுத்து வாங்கச் சொல்லியிருக்கிறார். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மக்கள் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை. தாங்களே மரக்கன்று பண்ணைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இரண்டு மூன்று அடி வளர்ந்ததும் அந்த மரக்கன்றுகளை நட்டு அது பிழைத்தபிறகு பசுமைப்பட்ட இயக்கம் ஒன்றை ஊருவாக்கி அதிலிருந்து சிறு தொகையை அம்மக்களுக்கு வழங்கினர். ஒரு மரக்கன்றுக்குக் கொடுக்கப்படும் தொகை சிறிதுதானெனினும் அது பல மடங்காகப் பெருகும் போது அந்த பணம் பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கும், பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவதற்கும் பேருதவியாக இருந்தது. இப்படி மக்களை ஈடுபடுத்தி நிலைத்த மாற்றத்திற்கான ஒரு பாதையை ஏற்படுத்தினார்.

இன்று ஆப்பிரிக்க மக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகக் கிடைத்தவைதானெனினும் இந்த மாற்றத்தை முன்னெடுத்த வங்காரியின் உழைப்பு பெருமைப்படுத்தப்படவும், வணங்கக்கூடியதாகவும் இருக்கிறது.
குடிநீர் இல்லை, சரியான சாலைவசதி இல்லை, கட்டுமானப் பொருட்கள் இல்லை, உணவு இல்லை, மண்வளமில்லை என்று முப்பது வருடங்களுக்கு முன் இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியமைத்திருக்கின்றனர் வங்காரி மாதாவின் தலைமையிலான ஆப்பிரிக்க மக்கள். சுற்றுச் சூழலைப் பேணாத சமூகம் அல்லது நாடு எல்லாவற்றிருக்கும் கையேந்தி நிற்கும் நிலைமையைத்தான் பெறக் கூடும். இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர மரங்களை அழித்தெடுத்துவிட்டு சாலை நடுவினில் அழகுச் செடிகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்ற ஒரு வாகனத்தையும், அலுவலரையும் நியமித்து நாம் சாதித்தது கார்பன் மோனாக்சைடையும், சிறுவிலங்குகளையும், பறவையினங்களையும் அழித்ததுதான்தான்.

மரமின்றி மழையில்லை என்பது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே தெரியும். ஒரு மரம் வெட்டப்படுகிறதெனில் அதற்கு பதிலாக ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் எனும் மனப்பாங்கு நம்மிடையே வளர்ந்திருந்தால் இன்று நமது சாலைகளின் இருமருங்கும் பசுமையின் பயணிப்பு தொடர்ந்திருக்கும். இனி நாம் மழை நீர் சேகரிக்க வெறும் தொட்டிகளைக் கட்டிவிட்டு மழைக்காக காத்திருக்க வேண்டியதுதான். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க காடுகள் அவசியம். காடுகள் மனிதகுலத்தின் நாகரீகத்தை மேம்படுத்தும் என்பதை உலகம் மெதுவாக உணரத் துவங்கியிருக்கும் வேளையில் அதைச் செயல்முறைப்படுத்தியிருக்கும் வங்காரி மாதாய் வணங்கத்தக்கவர் மற்றும் பின்பற்றப்பட வேண்டியவர்.


இசைப்ரியா – ஊடகவியலாளர்:

உலகத் தமிழர்களிடையேயும், ஊடகத்துறையினரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர். புலிகளின் பெண் போராளியும், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியா கடைசிக்கட்ட போரில் தனது கணவரையும், ஆறு மாதக் குழந்தையையும் இழந்து சிங்கள இராணுவத்தால் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதை ஐ.நா.வும் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒரு போரளியாக தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்ட இசைப்ரியா குரல்வளமிக்கவராகவும், கலைத்துறைக்குப் பொருத்தமானவராகவும் அறியப்பட்டு செய்திவாசிப்பாளரானார். 2006-ல் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதியான ஸ்ரீராமைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேலி என்ற குறும்படத்தில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழும் ஒரு பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘கட்டுமரம் மேலே ஏறி’ என்ற ஒரு மெல்லிசைப் பாடலிலும் நடித்திருக்கிறார். அந்த பாடலுக்குப் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இப்படி பல கலைகளைக் கற்று செயல்படுத்தி வந்தவர்.

பெண்களை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சிங்கள ராணுவம் தன் கையில் ஏந்தியிருக்கும் குரூர ஆயுதம் வன்புணர்வு. இந்த ஆயுதத் தாக்குதலுக்கு இசைப்ரியாவும் இரையாகியிருக்கிறார். இதனை செல்ஃபோனில் பதிவுசெய்து வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்டது. பார்ப்பவர்களைக் கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர். வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் அறிவரசன் இரண்டு வருடங்கள் ஈழத்தில் தமிழ் பணியாற்றியவர். அவர் (2010 ஜனவரி 6) நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ‘மாலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே புலிகளின் ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.

துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் , தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
அதனால் அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது இசைப்பிரியாவை சந்தித்தேன்.

அப்போது அவரிடம், “இசை சரி… பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே…” என்றேன். அதற்கு அவர், ‘இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர், ஆனால் இசைப்பிரியா.. இசைப்பிரியா.. என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்த்தால், அதுவே நிலைத்துவிட்டது’ என்றார்.

இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர், ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக்காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ்ப் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன் என்றார் அறிவரசன்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் என்ற எண்ணத்தை வளரவிடாமல் செய்பவர்கள் கலைத்துறையினரே. கலை கலைக்காக அல்ல. மக்களுக்காக. என்று செயற்பட்டு வந்த இனப் போராளிகளில் ஒருவரான இசைப்ரியா கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. எத்தனையோ இசைப்ரியாக்கள் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் இன்றும் கண்டும் காணாமல் இருக்கும் இனம் வரலாறு கூறும் பழிச்சொற்களில் இருந்து தப்பமுடியாது என்பது மட்டும் நிதர்சனம். போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
சோமாலி மாம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர்:

கம்போடியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் இவர் .
சோமாலியிடம் தான் பிறந்தற்கான எந்த அத்தாட்சிப் பத்திரங்களோ, ஆதரங்களோ இருக்கவில்லை. அவளது நினைவிலும் அது பற்றி தெரியவில்லை அவள் 1970 அல்லது 1971 இல் பிறந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது. எழுபதுகளின் நடுப்பகுதிலில் கம்போடியமிது Khmer Rouge கொண்ட பயங்கரவாதம் பல மக்களை கிராமப் புறங்களுக்கு தள்ளியது. அந்த நிலையில் அவள் தன் பெற்றோரை Phnong என்ற கிராமத்தில் அவள் தவற விட்டாள். அநாதை ஆகினாள். ஒரு மனிதன் அவளை அவளது தகப்பனைக் கண்டுபிடித்து தருவேன் என சொல்லி அழைத்துக் செல்லும் வரை அவள் அந்த அநாதை இல்லத்திலேயே வாழ்ந்தாள். அவள் அங்கு அவனின் அடிமை என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டாள். அவனை தாத்தா என அழைக்குமாறு பணிக்கப்பட்டாள்.

14 வயதிருக்கும் போது வளர்த்தவராலேயே வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்ட சோமாலி யாரோ ஒருவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்டார். அவருடைய கணவரிடமும் கொடுமை அனுபவித்த மாம் தினமும் ஆறேழு பேருடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தப்பட்டார். மறுத்தால் பாம்புகளும், தேள்களும் விடப்பட்ட அறையில் அடைக்கப்படுவார். இப்படியான வன்முறைக்குள் வீழ்த்தப்பட்ட சோமாலி தெருவில் நின்று தானே ஆள் கூப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட சரியான சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

கம்போடியாவிலிருந்து தப்பித்த சோமாலி மாம் 1993ல் ஃபிரான்சுக்கு வந்தார். பின் பாரிஸ் சென்ற அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு அவர் கண்ட உண்மை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிறைய பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு 1996ல் AFESIPஅமைப்பொன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றினார். தாய்லாந்த், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளிலும் ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 4000 பெண்களைக் காப்பாற்றியுள்ளார். 2007ல் சோமாலி மாம் பவுண்டேஷன் ஒன்றை நிறுவி தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்.

அந்த வயதில் நடந்த சம்பவங்களை ஒருநாளும் இரவுகளில் நினைக்காமலிருக்க முடியவில்லை. நினைத்துவிட்டால் என்னைக் கத்தியால் குத்துவதைப் போன்ற உணர்வும், கெட்ட கனவுகளும் வரும். இது தினமும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. என்னால் இதிலிருந்து விடுபட இயலவில்லை. பாலியல் அடிமைகளாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ரணமாக இருக்கும். வாழ்வது பெரும் போராட்டத்திற்குறியதாகவும் இருக்கும். வலிகளோடு இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குற்றவுணர்வும், தனிமையும் சூழ்ந்திருக்கும் இந்த வேதனையிலிருந்து அவர்களை மீட்க வேண்டியது அவசியம். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ முன்வர மாட்டார்கள். அவர்களை நேசிக்கவும், தோஹ்வி செய்யவும் முன் வந்து அவர்களுக்கு இந்த உலகை எதிர்கொண்டு வாழும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவது என் நோக்கமாக இருக்கிறது.

என்னுடைய அம்மா, அப்பா யாரென்று எனக்கு தெரியாது. எனது வயது தெரியாது, சோமாலிதான் எனது பெயரா என்றும் தெரியாது. நான் தெரிந்து கொண்டதெல்லாம் வலி, வேதனை, சோகம். இதைப் போல பாதிக்கப்பட்டவர்களை என்னால் அவர்கள் பேசாமலே புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் இதயத்திலிருந்து சிரிப்பைக் கொண்டு வருவது மிகப் பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். என்று சோமாலி நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். ‘The Road of Lost Innocence’ என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றோடு கம்போடிய நாட்டு அடிமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
சோமாலி தனது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரது மிகப்பெரும் சாதனை ஒரு அடிமையான தன்னை மீட்டெடுத்து அதே போல பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டெடுத்து வருவதுதான்.

சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களை அழித்தெடுத்து புதிய மாற்றங்களையும், உரிமைகளையும் பெற போராடும் இவர்களைப் போன்றவர்களை பார்த்தாவது, படித்தாவது நமது செயல்பாட்டையும் சமூகத்தில் முன்னெடுத்தோம் எனில் அதுவே மனிதம் இன்னும் இருப்பதற்கான அடையாளமாகும்.


சாதியத்தால் நீ சாதித்ததென்ன?



சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம், இலங்கை)

நூற்றாண்டு பல கடந்தும் மில்லேனியம் கொண்டாடியும் தொழில்;நுட்பம் உச்சத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த தொழிநுட்ப யுகத்திலும் சாதியம் பற்றிய சிந்தனைகளையும் அதன் வெற்றிகளையும் வாய்கி;ழியக் கத்திக் கொண்டிருக்கும் பலரைப் பார்த்து சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை.பண்டைக்கால வேதங்களிலும,; பிராமணங்கள், உபநிடதங்கள,; இஸ்மிருதிகள,; சாஸ்திரங்கள,; புராணங்கள் என்பவற்றிலும் மனித வாழ்வு வளம் பெற ஓங்கி நிற்கும் சமூக பொருளாதார அரசியல் வாழ்விலும் இந்த சாதிய அமைப்பு முறை பல்வேறுப்பட்ட கோணங்களிலும் முறைகளிலும் புதிய பரிமாணங்களை பெற்றுள்ளதினை நாம் அவதானிக்க முடிகிறது.

தனியுடமை சமுதாயப் பாதுகாப்புக்காகவே ஒவ்வோர் மனிதனும் திட்டமிட்டுப் பின்பற்றும் கொள்கை (?)யின் விளைவாகவே இந்த சாதியத்தின் ஓங்கலும் கொடுமைகளும் சாஸ்திரங்களும் அதிகரித்துள்ளமையை நாம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்வதும் கடினமான செயலல்ல.

இந்த சாதியத்தை தூக்கிப்பிடித்து இன்றும் அது நீடித்த ஆயுளுடன் ஜீவிக்க துணை புரிந்ததில் பெண்களுக்கு கணிசமான பங்களிப்பு உண்டெனலாம்.அநேகமான சாதியத்தின் அடையாளங்களாக செயற்படும் பெண்கள் தம்முடைய ஒவ்வொரு கண் மூடித்தனமான காரியங்களாலும் சாதியத்தையும் சடங்காசாரங்களையும் வலுப்பெற வைத்தப் பெருமை பெண்களுக்குண்டு.(?)

பொதுவாக வீடுகளில் நடக்கும் விசேட நிகழ்வுகளிலும் அமங்கல நிகழ்வுகளிலும் இந்த சாதிய சம்பிரதாயங்களை எந்தவித அறிவியல் சிந்தனைகளையும் சிந்திக்காது கட்டாயத்தின் பெயரிலும் பிடிவாதத்தின் பெயரிலும் சம்பிரதாயங்களை நிறைவேற்றி வைக்கும் பாரிய பணியை செய்வதில் பெண்கள் ரொம்பவும் முனைப்பாக இருப்பது ஆழமான சிந்திப்புகளிலே தெரிய வரும். சாதியில் இப்படி செய்ய மாட்டார்கள் இது நம்ம சாதிப் பழக்கம்.இது நம்ம வரன் முறை சாதிக்கு ஒரு கோட்பாடு இருக்கில்ல என்றபடி வாய் கிழிய கூவி இப்படி கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சாதிக் கொன்றாக உருவாக்கியும் உற்பத்தி பண்ணியும் பன்முகப்படுத்தியும் அதனை அடுத்த பரம்பரைக்கு அர்த்தமில்லாது கொண்டு செய்வதிலும் பெண்கள் அச்சப்படாதவர்களாகவும் கவலைப்படாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இது ஏன் இப்படி வந்தது என்பது பற்றிய கவலைகள் கூட அவர்களிடத்தில் துளியும் காணப்படாது.சாதியத்துடனான சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் ‘ஏன்’செய்யாமல் விடக் கூடாது என்பதற்கான விளக்கத்தை கேட்டாலோ அதனை செய்யாது விட்டாலோ அதனை மிக அதல பாதாளமான தெய்வக் குற்றமாக கருதும் பெண்கள் நம்மில்; அனேகர் உள்ளனர். இது அவர்களின் அறியாமையே.

ஏதிர்காலத்தில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை கூட நிகழ்காலத்தில் நடக்காது போன சம்பிரதாயங்களுடன் முடிச்சிப் போடும் போலியதார்த்தங்களை அவரகள்; கட்டியெழுப்பிக்கொண்;டிருப்பது மிகவும் துக்கரமான விடயமாக காணப்படுகின்றது. சமயம் சார்ந்தும் சாராத நிகழ்வுகளில் கூட சாதியம் சார்ந்த விடயங்கள் புதிய பரிமாணங்களுடனும் நவீனமயமாக்கலுடன் மெழுகேற்றப்பட்டு அரங்கேற்றிக் கொண்டிருப்பது பொதுவாக பெண்களின் அறிவீனத்தைகாட்டுவதேயொழிய அறிவை பட்டை தீட்டும் வழியல்ல.மூடக் கொள்கைகள் என்று தெரிந்தும் அவற்றுக்கு சாவுமணியடிக்கத் தெரியாத முடியாத மனத்தி;டம் கொள்ளாத பெண்களினால் சமுதாய முன்னேற்றம் எப்படி வரும்? ;அவ்வாறான பெண்களால் விடுதலை எப்படி விட்டு விடுதலையாகி வரும்?

பெண்கள் பலர் கூடியிருக்கையிலும் குறிப்பிட்ட விழாக்கள் உறவினர்களுள் பகிர்ந்து கொள்ளும் பொழுது இவர்களின் கதைகள் கருத்துக்கள் யாவையும் சாதிய அடிப்படையான போக்கினை கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
அவ்வாறான போக்குள்ளவர்களையே இவர்கள் கூட்டுசேர்த்துக் கொள்ளும் பண்பும் பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும்.அந்த சிந்தனைகளுடன் ஒத்துப் போகாதவர்களை புறந்தள்ளி பார்ப்பதும் இழிவாக கருதுவதும் சுத்தமற்ற ஆளாக பார்ப்பதும் ஆசாரமற்ற ஆளாகவும் இழிவுப்படுத்துவதில் பெண்கள் முனைப்பாக இருப்பது நம்மில் பலருக்கும் புரியும்.

எந்த வேத அடிப்படையில் பெண்கள் சாதியத்தினை தூக்கிப் பிடிக்கிறார்களோ அந்த வேத அடிப்படையிலும் காணப்படும் பெண் கடவுளர்களும் பெண்களும் இழிவாக்கப்பட்டிருப்பது இவர்களின் அறிவுக்கு ஏனோ அகப்படவில்லை.கணவனை நம்பாத லட்சுமி தேவியாகட்டும் கண் அவிந்த காமகியான லட்சுமி தேவியாகட்டும் கங்கை கலைவாணியாகட்டும் (தேவி பாகவத புராணம்) மிக துச்சமான பிறவியாகத்தான் இவர்களை புராணங்கள் கூறுகின்றன.

துடக்கு என்ற பெயரில் பெண்கள் ஓதுக்கப்படுவதும் பலிபீடத்தை அண்ட முடியாத பெண்கள் பூஜகர்களாக முடியாத வகையிலும் தான் பெண்ணை சாஸ்திரங்கள் பேசுகின்றன. கடவுளர்களாக படைக்கப்பட்ட பெண்களும் கலா அம்சங்களுடனும் பக்தியை விட அங்கங்களால் பரவசப்படுத்துபவர்களாகவும் தவ வாழ்வை களைப்பவர்களாவும் தவத்துக்கு இடையூறு செய்பவர்களாகவும் பெண்கள் வேதங்களிலும்; புராணங்களிளும் வர்ணிக்கப்படுகின்றமை ஏன் பெண்களுக்கு புரிவதில்லை.

அறிவு நிலை சாராத வெறும் சாஸ்திரங்களை சின்ன சின்ன மூடப் பழக்கங்களை நிஜமான அறிவு நிலைகளாக கருதும் பெண்கள் மத்தியில் இந்த சாதிய அமைப்பும் அதன் அழுத்தங்களும் இருப்பது என்னவோ அவர்கள் அறிவியல் சிந்தனையில் ஆழம் கருதாத நிலையாகவே காணப்படுகின்றதெனலாம்.

ஆனால் அறிவுக் கண்ணை அகலத்திறக்க வேண்டிய பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் இன்றும் சாதியத்தின் வெறியிலும் அமைப்பிலும் தங்களை மூழ்கடிப்பதுமல்லாமல் தான் சார்ந்த மாணவப் பரம்பரையையும் அமிழ்த்தி வைத்திருப்பதென்னவோ கொடுமையான விடயம் தான்.
கூட்டமாக உணவருந்தும் இடை வேளையில் அநேகமான பெண் ஆசிரியைகள் சாதிய அமைப்பை அடிப்படையாக கொண்டே உணவினை பகிர்ந்துக் கொள்வது உண்டுக்கொள்வதும் அனுபவ ரீதியாக நாம காணுகின்ற சாதாரண விடயமாகும்.
சாதிய அமைப்பு முறையை தகர்க்கும் சிந்தனைகளை இழிவாக கருதுவதும் அதுசார்ந்த ஆய்வுகளில் ஆழம் அகலம் பார்த்து அதனை தோண்டி ரிஷp மூலம் நதி மூலம் வரை அவர்களின் சிந்தனைகள் செல்வதும் அவர்களின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளேயாகும் .
சாதிய கட்டுப்பாடுகளுடன் வாழும் பெண்களை பவ்யமாக நோக்குவதும் நல்லவர்களாக கருதுவதும் அவற்றை விட்டெறிந்த பெண்களை இழிவாக கருதுவதும் (?)நம்முடைய அறிவுக் கண் திறக்க வேண்டிய பெண் ஆசிரியைகளே.

அகிலத்தை அகலக்கண்கொண்டு நோக்கச் செய்வதும் அறிவுக் கண்ணை ‘கசடற’திறக்க வேண்டிய ஆசிரியைகள் அறிவியல் சிந்தனைக்கூடாக தமது மாசற்ற பணியை சரியாக செய்பவர்களாக காணப்படல் மிகுந்த அவசியம் இவர்களினாலேயே மட்டும் சாஸ்திரப் பேய்களும் சாதியக் கொடுமைகளும் பறந்தோடி எழுச்சி பெறும் சமூகம் உருவாகுமென்பதில் சந்தேகமில்லை.இதற்கு எத்தனை பேர் தயாராக உள்ளனர்.இனி பேசுங்கள் பெண்ணுரிமையும் பெண் விடுதலையும்.


Saturday, October 8, 2011

மூன்று வினாடிகளுக்கு ஒரு குழந்தைத் திருமணம்




உலகளவில் குழந்தைத் திருமணம் மூலம் பெண் குழந்தைகளின் வாழ்வு பல வகைகளில் சீரழிக்கப்படுகிறது .பெரும்பாலும் இப் பெண் குழந்தைகளின் ஏழ்மை அறியாமையைக்காட்டி குழந்தை திருமணம் என்னும் பாலும் கிணற்றில் தள்ளி அவர்களின் முன்னேற்றம் மறுக்கப்படுகின்றது. பெரும்பாலும் குழந்தை திருமனத்திக்கு தள்ளப்படும் குழந்தைகளின் வயது.14 -18 க்குள் இருக்கின்றது .


இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகமாக ஆபிரிக்கா மத்திய மற்றும் தெற்க்காசிய நாடுகளில்தான் நடத்தப்படுகிறது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளவில் லண்டனை சேர்ந்த ப்ரியகிங் வாவ் என்கிற அமைப்பின் தலிவர் மேரி டேலண்டன் குரல் கொடுத்துள்ளார்.

மூன்று நொடிகளுக்கு ஒரு பால்ய விவாகம் வீதம் உலகளாவில் நடை பெறுகிறது என்றும் இது இன்னும் பத்து வருடத்தில் இரு மடங்காகும் எனவும் தாம்சன் ரைட்டர் என்னும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது