ஆணாதிக்கம்


அகலிகையே  ! என்னைத்தெரியுமா
இந்திரனாய் வந்தேன்
உன் அழகை தின்றேன் !
கௌசிகனாய் பார்த்தேன்
கல்லாக்கிப் போனேன் !
கடவுளாய் உன்னைக் கடந்தேன்
காவியப் பெண்ணாக்கினேன் 
உன் கண்ணீர் விலக்கி !



ராம பிறானாய் காதலிப்போம் !
ராவணனாய் கடத்தி வைப்போம் !
பிறர் மனைவி தொடமாட்டோமென்று
அனைவரையும் நம்ப வைப்போம் !
குப்பன் சுப்பன் கிளப்பி விட்டான்
என்று சொல்லி
தீ அள்ளி தின்னச் சொல்லுவோம் ........


அண்ணன் பொண்டாட்டி அன்னை
என்றும் சொல்லுவோம் !
ஐவரையும் அனுசரிக்கணும் என்றும்
சொல்லி அவையை அடக்கி வைப்போம் !   

ஐவருக்கும் அன்னையே உன்னைத் தந்தாள்
என்றே அம்மா புகழ் பாடுவேன்!
துர்ச்சாதனனாய் வந்து உன் துகிலுரிந்துடுவேன் !
தீராத விளையாட்டுப் பிள்ளையாய் உன் துணியையும்
திருடி போவேன்!
துயர் தீர்க்கும் கிருஷ்ணனாய் ஓடி வந்து
உன் கற்பை காத்தருளுவேன் !


               எஸ் .நிகிந்தன்






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.