Thursday, September 22, 2011

மாறவேண்டிய கருத்துருவாக்கங்கள்



ஆதிலட்சுமி சிவகுமார்

பெண்கள் எவ்வளவு தான் முன்னேற்றங் கண்ட பொழுதிலும் பெண்கள் பற்றிய சமூகபார்வை என்பது இன்னமும் சாபக்கேடானதாகவே இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பெண்ணிற் பெருத்தக்க யாவுள' என்று வள்ளுவர் எழுப்பிய கேள்வி முதலாக இன்று வரை பெண்ணினம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

பெண்களின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவில் இருந்தாலும் பெரும்பாலும் துயரமும் ஆதங்கமும் நிறைந்ததாகவே இருக்கினறன. அண்மையில் நண்பர் ஒருவர். 'நீங்கள் (பெண்கள்) எல்லாம் நத்தைகள் ஓட்டுக்குள் தான் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். இது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும் கூட சமூகத்தில் காலம் காலமாய் பெண்கள் பற்றிய பார்வை இப்படித் தான் இருந்து வருகிறது என்பதற்கு இக்கூற்று சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது.

பெண்களின் ஆற்றல்களை பலமாக அங்கீகரிக்க பலரும் விரும்புவதில்லை. உதாரணமாக, யாருக்கும் அடங்காமல் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த கொம்பன் யானையை தன் வலிமையால் அடக்கிக்காட்டிய வீரப்பெண் அரியாத்தை. ஆனால் இந்தப்பெண் தெய்வஅருளாலேயே யானையைப் பணியவைத்ததாக கூறுவோரும் உள்ளனர். அதாவது பெண்னின் ஆற்றலை ஜீரணித்துக் கொள்ளமுடியாத நிலையில் வெளிப்படுத்தும் கருத்தே இதுவெனக் கொள்ளலாம். தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல உலகிலுள்ள பெரும்பாலான இனச் சூழலில் சமூகத்தில் இப்படியான கருத்துக்கள் இருப்பதை நாம் அறியலாம். பிரான்சின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கரங்கள் நீண்டு விரிந்து தெரிந்த போது ஆர்க் எனும் கிராமத்திலிருந்து ஆவேசமாய் புறப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களை மோதிவென்று படைநடாத்திய வீரப்பெண் ஜோன் ஓப் ஆர்க் பின்னாளில் சூனியக்காரியென்று எள்ளி நகையாடப்பட்டு, உயிருடன் தீமூட்டிக் கொளுத்தப்பட்டாள் என்பது வரலாறு.

இன்றைக்கும் பல கிராமங்களில் பெண் பிள்ளைகள் பரீட்சைகளில் கூடிய பெறுபேறு பெற்றால், விளையாட்டுக்களில் பரிசுகள் பெற்றால் அதை பிள்ளையின் கெட்டித்தனம் என்று மெச்சுவதை விடுத்து 'கடவுளின் கிருபை' என்று மாற்றுவதை நாம் கண்கூடாய் பார்க்கின்றோம். காலம் காலமாக பெண்கள் பற்றி ஊன்றப்படுகின்ற கருத்து கருவூலங்களின் தோற்றப்பாடுகளே இவைகள் பெண்களின் உலகம் விரிவடைந்து வருகின்றது. பெண்கள் முன்னேறி வருகின்றார்கள். பெண்கள் சாதித்து வருகின்றார்கள். ஆனாலும் பெண்கள் மீதான சமூகப்பார்வை என்பது மாற்றம் காணாததாகவே இருக்கிறது.

இத்தகைய நிலைக்கு எந்த ஒரு தனிநபரையும் குற்றவாளியாக கூற முடியாது சமூகத்தில் பெண்கள் பற்றி ஆழப்பதிந்திருக்கும் அடிப்படைக் கருத்தில் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் என்பவள் யார்? இந்த உலக இயக்கத்தில் பெண்னின் பங்களிப்பு என்ன? அவள் தனது பங்களிப்பை முழுமையாக செய்யவிடாமல் தடுத்துநிற்கும் காரணிகள் என்ன என்பவை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது.

எமது தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல, 'ஆண்மைக்கும், பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது. அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது'. எனவே படைப்பியல் ரீதியாக பெண் வேற்றுமை காட்டப்படவேண்டியவள் அல்ல, மாறாக பெண் என்பவள் சமூகச் சுழற்சிக்கு உந்து சக்தியாகத் திகழவேண்டியவள்.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள் தம் நிலை உணர்வதில்லை. அகங்கள் குறுகியிருப்பதால் முன்னேற்றங்கள் தடைப்படுகின்றன. முன்னேற்றங்கள் தடைப்பட்டு குறுகிய வட்டத்துக்குள் வாழும் போது அவள் தன்னாலும் பிறராலும் சுமையாக உணரப்படுகிறாள். இந்த உணர்வு காலப் போக்கில் பெண்ணுக்குள் தாழ்வுச் சிக்கலை உண்டு பண்ணுகிறது.

காலம்காலமாய் பெண்பற்றி ஊன்றப்படும் பிற்போக்கான கருத்துகளும் பெண்ணுக்குள் உருவாகும் தாழ்வுச் சிக்கலும் சேர்ந்து அவளை அடிமைப்படுத்தி விடுகின்றன. அடிமையாகிப் போகும் மனநிலை காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே வாழ்வாகிப்போகிறது. உண்மையில் பெண் என்பவள் தனக்குள் இருக்கின்ற திறமையை ஆற்றலை உணர்ந்து கொள்ளக்கூடியவளாக வேண்டும். கல்வியில் நாட்டங் கொண்டு சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும்.

நிர்வாகம் என்பது பெண்களுக்கும் ஏற்ற விடயம் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும். 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற கேள்விக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்றாலும் பதிலளிக்க வேண்டும் உலக சனத்தொகையில் சரிபாதி பெண்கள் என்கிறார்கள். முன்னேற்றங் காட்டும் அல்லது ஆற்றல்களை வெளிப்படுத்தும் பெண்களின் தொகை மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. உலகம் அறிவியலில் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்ட பொதிலும் பிற்போக்கான எண்ணங்களையும், சிந்தனைகளையும் பற்றிப்பிடித்து தொங்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்றைக்கும் சீதனப் பிரச்சினையால் திருமணமாகாத பெண்களின் பட்டியல் இருக்கின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் முகவர்களை நம்பி நடுத்தெருவில் நிற்கும் பெண்களின் கதைகள் வெளிவருகின்றன. காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பெண்களின் உலகம் அறியாமையிலிருந்து இன்னமும் முற்றாக விடுபடவில்லை என்றே கூறமுடிகிறது. குடும்பம் பல பெண்களுக்கு சுமையாக அழுத்துகிறது. 'யாராவது என் பாரத்திற் பாதியைச் சுமக்க முன்வரமாட்டார்களா?' என்று ஏங்கும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.

பெண்கள் தம்மனவுலக இருளில் இருந்து வெளிவரவேண்டும். ஒளிமையான எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். 'நன்மையும் தீமையும் பிறர்தர வாரா' என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எமது வாழ்வும் வலுவும் எமது கரங்களிலேயே தங்கியிருக்கின்றது. ஆரோக்கியமான சமூகத்தை - தேசத்தைக் கட்டி எழுப்பவேண்டுமென்றால் பெண்கள் அகவிடுதலை அடையவேண்டும். பெண்கள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற பிற்போக்குத்தனமான கருத்துக்கள் களைந்தெறியப்பட வேண்டும். பெண்களின் ஆற்றல்களும், ஆளுமைகளும் வெளிக் கொண்டு வரப்படவேண்டும் தம்மீது ஆழப்புரையோடி நிற்கும் சமூக கொடுமையும் அநீதியுமான ஒடுக்குமுறையைப் பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.

nantri - Eelanatham & Sooriyan.com


பெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை



பெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை:
"பெண்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்"
- கொற்றவை


'உயிர் எழுத்து' ஜூலை மாத இதழில் நான் எழுதிய "பெண்ணியம் ஓர் உரையாடலுக்கான தொடக்கம்” எனும் கட்டுரையை வாசித்து, அதற்கு எதிர்வினையாக க.சி.அகமுடைநம்பி சில மாற்றுக் கருத்துகளை எழுதியுள்ளார். அதற்கு 'பெண்ணியவாதிகளின் பிறழ்வான கருத்துகள்' என்றும் தலைப்பிட்டிருக்கிறார்.

என் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்துகள் மறு சிந்தனைக்குரியது எனும் வார்த்தைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் அதற்காக க.சி.அகமுடைநம்பி முன்வைக்கும் உதாரணங்கள் ஆதாரமற்றவை; முன்முடிவுகள் கூடிய ஆணாதிக்கத்தின் சொற்கள். ஒரு கட்டுரைக்கு எதிர்வினை எழுதும்பொழுது அக்கட்டுரையிலிருக்கும் குறிப்புகளை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் ஒரு புரிதலை நோக்கி உரையாட முடியும். அக்கட்டுரை முன்வைக்கும் கருத்துகளை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களிலிருந்தும் முன் முடிவுகளில் இருந்தும் விடுபடாமல், எதிர்பார்ப்புகளை அப்படியே எழுதுவதென்பது மாற்றுச் சிந்தனை என்பதைவிட, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கருத்தியல் கட்டமைப்புக்கு அடிமையாகிப்போன மனத்தின் வெளிப்பாடாகவே கருதத் தோன்றுகிறது.

"ஒரு ஆண் ‘ஆண்மை’ திறத்துடன் விளங்க வேண்டும், பெண் மக்கள் பெண்மைப் பொலிவுடன் ஒளிர்ந்து விளங்க வேண்டும்” என்கிறார். ஆண்மை பெண்மை என்பதை எந்த அடிப்படையில் வரையறுக்கிறார் க.சி.அகமுடைநம்பி? அவருடைய கட்டுரை முழுதும் ஆண் வலிமைமிகுந்தவன், பெண் மென்மையானவள் என்கிறார். ஆணாதிக்கம் வகுத்துள்ள ‘ஆண் அறம்’ ‘பெண் அறம்’ எனும் அரசியலையும் சம்மபந்தப்பட்ட என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். சதவிகிதங்கள் கொடுத்து அதில் குறைபாடு ஏற்படும்போது ஆண்மை பெண்மை திறன் மாறுவதாகவும், அதுவே ‘அரவாணிகள்’ என்று அறியப்படுவதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்! பாலியலையும் கட்டமைக்கப்பட்ட பாலின அடையாளத்தையும் (sex and constructed gender qualities) போட்டு குழப்பிக் கொண்டுள்ளார்.

பாலியல் என்பது உயிரியல் அடிப்படையில் உடற்கூறை வைத்து அடையாளப்படுகிறது. ஆனால், பாலின அடையாளம் என்பது சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆதிக்க சக்திகளினால் கட்டமைக்கப்படும் ஒன்று. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை அப்படி ஒரு கட்டமைப்பு நடந்திருக்கிறது என்பது அறியப்படாமலும் அல்லது அறிந்தாலும் அது குறித்து செய்வதறியாமலும் இருந்திருக்கிறது. பல்வேறு போராட்டங்கள் மூலம் 'ஒடுக்கும்’ வரலாறு, அரசியல் குறித்தான ஆய்வுகள், விழிப்புணர்வுகள் நடந்தேறுகின்றன. அத்தகையப் போராட்டங்களில் ஒன்றே பெண் விடுதலைப் போராட்டம் என்பது. இருமை அடையாளங்களுக்குள் எல்லாவற்றையும் நிறுத்தி எடைபோடுவதென்பதும் துறக்கப்படவேண்டும் என்றும் சமீப காலங்களில் குரல்கள் எழுப்பப்படுகின்றன.

சமுதாயம் உருவாக்கியுள்ள ஆண் பெண் எனும் அடையாளம் இருப்பதால்தான் அது விவரிக்கும் தன்மைக்குள் வராதவர்களை பலவாறாக எள்ளல் செய்யும் போக்கும் அவர்களை நிராகரிக்கும் போக்கும் நிலவுகிறது. அரவாணிகள் குறித்து அவர் கூறியிருக்கும் விளக்கம் சற்றும் அறிவியல் தன்மை அற்றது; உயிரியலை இருமை அடையாளங்களை வைத்து எடை போடும் குறுகிய சிந்தனை. எளிய எடுத்துக்காட்டாக க.சி.அகமுடைநம்பி கூறிய கருத்தின்படி, குறையுடைய ஆணை பெட்டை, மலடன் பொண்டுகன், பேடி என்ற சொற்களை ஆண் சமூகமே ஏற்றிவைக்கிறது. அந்தச் சமூகமே ஆண்களுக்கு இளம் வயதில் வழுக்கை விழுவதை வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றம், சூழலியலில் மாசு, சுரப்பிகளில் மாற்றம் என்று எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்மையின் வெளிப்பாடாய் கருதுகிறது. அதை அழகியல் குறைபாடாக கருதுகிறது. இந்த அழகியல் அபத்தமானது; ஆண்களுக்கு எத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது என்பதை எவரும் அறிவர். இதற்கிடையில் அறிவியல் வளர்ச்சியை முழு முற்றாக நம்பும் க.சி.அகமுடைநம்பியின் போக்கானது, எவ்வகையில் நிறைவு, நிறைவற்றது என தரம் பிரிக்கிறது?

ஆணாதிக்கமானது பெண்கள் மேல் ஏற்றிவைத்திருக்கும் அழகியல் எதிர்பார்ப்புகளுக்கு நிகராக ஆண்களின்மேலும் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்றிவைத்திருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியாமல், அது சாத்தியம் என்றுகூட அறியாமல்தான் ஆண்கள் பல்வேறு ’தளர்வு’ சாதனங்களை நாடுகின்றனர். ஒருவகையில் மனநோய், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, கொலைச் சிந்தனை என எல்லாவற்றையும் இந்தச் சமூக அமைப்பே ஒருவருள் விதைக்கிறது. பாலியல் அடையாளத்தையே மீள்கட்டுமானம் செய்யவேண்டும் எனும்பொழுது அவ்வடையாளங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள நடை, உடை, பாவனை, மனநிலை, நடத்தை, கடமைகள் ஆகியவைகளை எப்படி கேள்வியின்றி ஏற்றுக் கொள்வது?

பெண்மை நிறைவாகப் பெற்றுள்ள பெண் தன் கணவரிடம் அடங்கி இருக்கவே விரும்புவாள், அதுபோல் ஆண்மை நிறைவாகப் பெறாத ஆண்மகன் தன் மனைவியிடம் அடங்கியிருக்க விரும்புவான் என்கிறார் க.சி.அகமுடைநம்பி. இதற்கான தரவுகளை ஊகங்களிலும் அவர் கூறுகிற முழு வளர்ச்சியும் நிறைவும் அடைந்த ஆண்களின் ஆணாதிக்க விருப்பத்திலிருந்தும் ஆசையிலிருந்துமே கூறுகிறார். எந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பெண் அடங்கி இருக்க விரும்புவாள் என்கிறார்? ஃப்ராயிடின் “ஆண்குறி ஏக்கம்” (penis envy) என்பதைக்கூட பெண்ணியலாளர்கள் கட்டுடைத்துவிட்டனர் இன்னும் சொல்லப்போனால் நிராகரித்தும் விட்டனர். ஆணாதிக்கத்தின் வழிமுறையான ஆணின் ‘எதிர்ப்பார்ப்புகளை’ பெண்களுக்குரிய விதிகளாக, குணாதிசயமாக மாற்றும் சிந்தனையின் அடிப்படையே க.சி.அகமுடைநம்பியின் எழுத்துகளில் உள்ளது.

தன் மனைவிமேல் அன்புகொண்டு ஒரு கணவன் விட்டுக் கொடுத்து வாழ்வதை கொச்சைப்படுத்தும்விதமாக இருக்கிறது அவரது இரண்டாவது விவரிப்பு. இதுபோன்ற 'சமூகப் பார்வைகளே’ ஆணை தன் மனைவி மீது அன்பை செலுத்தவிடாமல் தடுக்கிறது. (அன்பு என்றால் என்ன என்பதை பின்நவீனத்துவமும், மார்க்சியமும் யதார்த்தத் தளத்தில் எப்படி பொருத்திப் பார்க்கிறது என்பது இங்கு ஆராயப்படவேண்டியது.) குடும்பத்தில் வன்முறைகளை ஏவிவிடுகிறது. அமைதியாக செல்வதும் விட்டுக் கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடாக கருதாமல் வெறும் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றம், பற்று, வரவு என்ற நிலையிலும், இது தவிர்த்து நான் மேற்கூறிய ஆண்மைக் குறைவு என்பது ஆதிக்கச் சிந்தனையாக உள்ளது. இதை ஆண்களேகூட விரும்பமாட்டார்கள்.

பாரதியாரையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டியுள்ளார். கற்பு நெறி வழுவாமல் இருபாலரும் இருக்க வேண்டும் என்பதும் கட்டுப்பாடற்ற பாலியல் உறவை பாரதி கடுமையாகக் கண்டிக்கிறார் என்பதும் மகிழ்ச்சியே. பாரதி இன்னொன்றும் சொல்லியிருக்கிறார், 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று. அது குறித்து எந்தக் கவலையுமின்றி ஆணாதிக்கத்தின் வழி ’சிறந்த ஒழுக்கத்தோடு’ விளங்கும் ஆண்கள் மேலும் மேலும் ‘தனிச் சொத்தை’ பெருக்கிக் கொண்டுபோவது, அப்பாவி மக்களின் சொத்துகளை மிரட்டி அபகரிப்பது, கொலைகள் செய்வது, கொள்ளைகள் அடிப்பது இவைகள் குறித்து க.சி.அகமுடைநம்பியின் கருத்துகளை தெரிவித்தால் முன்னோர்கள் சொல்லியுள்ளவற்றில் ஆண்கள் எத்தனை விசயங்களை அப்படியே நெறி மாறாமல் பின்பற்றுகிறார்கள் என்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். பலதார மணமுறை என்பது முந்தைய உலகாயத (பொருள்முதல்வாத) சமுதாயத்தில் நிலவிய ஒன்று, தாய்வழிச் சமூகம் குலைக்கப்பட்டு தனிச் சொத்துப் பேணும் தந்தைவழிச் சமூகம் (கருத்துமுதல்வாத சமுதாயம்) தோன்றிய பின்னரே ஒரு தார மணமுறை தோன்றியது. அந்த முறையானது தனி மனித நலனை மட்டுமே கருத்தில்கொண்டு, சமூக நலன் எனும் போர்வையில் கட்டமைத்த விதிகளில் ஒன்றே கற்பு நிலை என்பது. ஒரு தார மணமுறை சரியா தவறா, அவசியமா இல்லையா என்பது வேறொரு விவாதம். ஆனால், அது உருவான வரலாற்றை தெரிந்து கொள்வதென்பது அவ்வமைப்பு குறித்தான கருத்து முரண்பாடுள்ளவர்களுக்குரிய உரிமை. அப்படி அறியும் தகவல்களை முன்வைத்து கேள்விகள் எழுப்புவதும் அதை ஏற்க மறுப்பதும் உரிமைக்குரியதே. விதிகளை உருவாக்க ஒரு சமூக அமைப்புக்கு உரிமை இருக்கும்பொழுது, பாரதியின் வழியில் தனி ஒருவருக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் அதை மீள்கட்டுருவாக்கம் செய்யும் கேள்விகளை முன்வைக்கும் உரிமையும் இருக்க வேண்டும் என்பது கணக்கில் கொள்ளவேண்டிய ஒன்று. அப்படி கேள்விகள் வைக்கப்படும்பொழுது பழைய சிந்தனை சட்டகத்திற்கு வெளியே வந்து உரையாடலைத் துவங்கினால் ஒழிய, புதிய சிந்தனை முன்வைக்கும் கருத்துகளை புரிந்துகொள்வது சாத்தியமில்லை.

பாரதியாரையும் திருவள்ளுவரையும் பெண்ணியத்துக்கு துணையாய் அழைக்கும் நம்பி, தமிழகத்தில் பெண்ணியத்தின் ஆசானாய் பெரியார் என்று ஒருவர் இருக்கிறார், அவருடைய கருத்துகளை ஒரு சிறு மேற்கோளாகக்கூட எடுத்துக்காட்டாமல் பெண்ணியம் குறித்து பேசுவது ஏன்? முதலில் இருப்பவர் கற்பு பற்றி அதிகாரம் எழுதியவர். பின்னவர் காணி நிலத்தோடு பத்தினிப் பெண்ணும் கேட்டவர். அது அவர் தொழும் பராசக்திக்கே வெளிச்சம்.

"அரசுக் காவல்துறை வல்லின வகையைச் சார்ந்தது, ஆகையால்தான் மெல்லினமாகிய பெண்கள் அதில் அல்லாடுகிறார்கள்” - இது என்ன ஒரு விவரிப்பென்றே புரியவில்லை. வலிமை பற்றிய நம்பியின் இந்தக் கருத்து நகரத்தில் குறிப்பாக மேற்தட்டு வர்க்க பெண்களையே மனத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மாறாக, கிராமங்களில் ஒரு பெண் ஆணுக்கு நிகராக புல் பிடுங்குவதிலிருந்து அதை சுமப்பது, விறகு வெட்டுவது, எல்லாவற்றிற்கும் மேலாக பலமணி நேரம் குனிந்தபடியே பின்னால் நகர்ந்தபடி செய்யும் ஒரே வேலையான நாற்று நடுதல் பற்றி அவர் அறிந்திருக்கிறாரா? ஆனால், எனக்குத் தெரிந்து எந்த ஆணும் இதுவரை நாற்று நட்டு பார்த்ததில்லை. அந்த வேலையை ஒரு ஆண் செய்து அதன் அனுபவத்தைப் பதிவு செய்தால் நம்பிக்கு வலிமை பற்றிய கருத்து முரண்படலாம்.

பெண்கள் ஆண்களின் கருத்தாக்கத்தால் அடக்கியாளப்பட்டதாலேயே மென்மையான காரியங்கள் மட்டுமே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். இங்கு மார்க்சின் மேற்கோளை நினைவூட்டுகிறேன்: "ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது". உதாரணத்திற்கு, திருப்பதி ஏழுமலையானையோ பத்மநாபபுரம் இறைவனையோ யாரும் பார்த்ததில்லை ஆனால், அவர்கள் பெயரில் சொத்து, வங்கிக் கணக்குகள்கூட இருக்கிறது. இந்த வேடிக்கையின் உச்சமாக குறிப்பிட்ட ஓர் அறையைத் திறந்தால் திறப்பவனின் தலைமுறையே விளங்காமல் போய்விடும் என்று சகலவிதத்திலும் ஆணாதிக்கம் முழங்கும் ஒழுக்கவிதிகளுக்குட்பட்ட ஆண் கூட்டம் சொல்வதை முழுநிறைவான ஆண்கள் கேள்விகள் ஏதுமின்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரார் சொத்தை கடவுளின் பெயரால் கொள்ளயடிக்கும் பெண்களை பற்றிய செய்திகள் மிக மிக சொற்பமே. அப்படி ஓரிருவர் இருந்தாலும் அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் ஆண் முதலாளிகளும் அரசியல்வாதிகளுமாக இருப்பர்.

உடல் சக்தியைக் கூட்டும் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் பெண்ணும் ஆணுக்கு நிகரான, அதற்கும் மேலான திறனை வெளிப்படுத்தமுடியும் என்பதையும் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். குழந்தை பெறும் பேற்றைவிட பெண்ணின் வலிமைக்கு வேறு சான்றுகள் இருந்துவிட முடியாது. மாதவிடாய் காலங்களில் குலைத்து தள்ளும் வலிகளையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ’இரட்டை உழைப்பில்’ ஈடுபடுவதையும் வலிமைக்கான உதாரணம். க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி முழு நிறைவு பெறாத ஆண்கள்தான் நகரங்களில், உணவகங்களில் சமையல் மாஸ்டர்களாய் சமையல் செய்கிறார்கள். துரதிருஷ்டம் அதில் முழு நிறைவு பெறாத பெண்களும் ஆண்கள் சமைப்பது தெரிந்தும் சாப்பிடுகின்றனர்.

இல்லற வாழ்வில் ஆண் குடும்பத் தலைவன். புறச் செயல்கள் ஆணுக்கு, அகச் செயல்கள் பெண்ணுக்கு என்று அதே இரண்டாயிர கால தமிழ் பல்லவி. அகம், புறம், உடல், ஆத்மன் போன்ற மதம் சார்ந்த கருத்துமுதல்வாதத்திலிருந்து வேறுபட்டு இயற்கையோடு ஒன்றிணைந்த பொருள்முதல்வாத நிலையை எடுத்துரைப்பதே பகுத்தறிவின் நோக்கம். அத்தகைய பகுத்தறிவைக் கொண்டு பெண் எழுத்தாளர்கள் திருக்குறளில் இருந்து சில அதிகாரங்களை நீக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன புரிதலின்மை இருக்கிறது. திருக்குறளை எழுதியவர் ஓர் ஆண், அதற்கு உரை எழுதியவர்களும் ஆண்கள், ஆண்களின் வார்த்தை அரசியலை கட்டுடைப்பது பெண்கள். அதில் உண்மை இருப்பதால் பதறும் ஆண் மனம் எதிர்வினைக் கண்டு அச்சமுறுகிறது என்றுதான் சொல்லவேண்டும். பெண்ணியம் கோருவது விழிப்புணர்வு, தனி மனித சுதந்திரத்தின் மீதான சுயமரியாதை. ஒவ்வொருவரின் மீதும் சுயமரியாதை கடைப்பிடிக்கப்படும் ஒரு சமுதாயத்தில் இதுபோன்ற அதிகார கட்டமைப்புகள் சாத்தியமில்லை. சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த நபரும் அடுத்தவரை துன்பப்படுத்துவது நடக்காதபோது ‘ஒழுக்கம்’ என்பதற்கான விதியின் அவசியம் இருக்காது.

பெண்கள் வெளியில் சென்று பணியாற்றுவதால் பிள்ளைகளை சீராகவும் செம்மையாகவும் பராமரிக்க முடிவதில்லை என்கிறார். இதைவிட ஆணாதிக்க, சுயநல சிந்தனை ஒன்று இருந்துவிட முடியாது. இருக்கவும் முடியாது; இதை எதற்கும் நிகரற்ற அயோக்கியத்தனம். அதற்கு வேறு காரணங்கள் இருக்க, க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி தாய்களால் சீராகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்ட ஆண்கள்தான் அரசியலில் கொலையும் கொள்ளையும் அடிக்கிறார்கள். கோயில்களில் அறங்காவலர்கள் என்ற பெயரில் பொதுச் சொத்தை சுருட்டுகிறார்கள். மடங்கள் கட்டி பெண்களை சீரழிக்கிறார்கள். இன்னும் அழுத்தம் கொடுத்தால் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்குகிறார்கள். குழந்தைகளில் வளர்ப்பதில் ஆணின் பங்கு வெறும் சம்பாதித்துப் போடுவதுதானா? குழந்தையை வளர்ப்பதில், வழிகாட்டுதலில் அவனுக்கென்று உள்ள பங்குகள் என்ன? ஆண்கள் சினிமாப்பாட்டை எழுதியிருக்கிறார்கள். "அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்" என்ற பாடலையே நினைக்கத் தோன்றுகிறது. இந்த வரிகளின்படி ஒருவன் தீவிரவாதி, தேசியவாதி, வன்புணர்ச்சிவாதி, கொள்ளைவாதி, கொலைவாதி ஆவதற்கான வழிகாட்டும் அறிவை தந்தையிடம் இருந்தே பெறுகிறான். பாலியல் தேவைக்கு, பணிவிடை செய்வதற்கு, பிள்ளை பேற்றுக்கும், வாரிசு வளர்ப்பதற்கும்தான் பெண் என்று கூறப்பட்டு வருவதைத் தானே பெண்ணியவாதிகள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எவ்வாறு இந்தக் கடமை பெண்களுக்கு, பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது என்பதுதானே இங்குள்ள கேள்வி.

"பெண்ணியம்" என்ற சொல்லுக்கு “பெண்மைக்குரிய எல்லா நல் இயல்புகளும் பொருந்திய நிலை" என்று பொருள்கொள்ளலாம் ஆயின், அத்தகைய பெண் இயக்கத்துக்கு இலக்கணமாகத் திகழ்பவளே திருவள்ளுவர் படைத்துக் காட்டுகிற மனைவி " என்ற நம்பியின் கருத்தே பெண்களின் மேல் வன்முறை செலுத்துவதாக இருக்கிறது. இதில் அவரது கடைந்தெடுத்த இரண்டாயிர வருட இலக்கிய கயமை. ஆம் இலக்கியம் உட்பட அனைத்தும் தமிழில் (உலக அளவில்) பெண்களுக்கு எதிராகவே படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் மகளாய், மனைவியாய், சகோதரியாய், தாயாய், மாமியாராய் அறியப்படுவதைத் தவிர அவளுக்கென்று முதலில் ஓர் உயிரியல் அடையாளமும் தனிமனித அடையாளமும் இருக்கிறது. இதையும் தாண்டி ஆண்கள் கற்பிக்கும் மேற்கண்ட உறவுகள் ஆணைச் சார்ந்து அவனைவிட்டால் விதியில்லை என்று ஏற்படும் உறவை மட்டுமே சித்திரிக்கிறது. இதையே ஒரு வாதத்துக்கு கணவன், தந்தை, மகன் விபச்சாரகன், வாழாவெட்டி என்று ஆணுக்கும் சொல்லலாம். வாழாவெட்டிக்கு ஆண்சொல் கிடையாது. அதேபோல் பெண்களில் வேசிதான் உண்டு ஆண்களில் பொம்பளைப் பொறுக்கி உண்டு. அதையும் ஓர் எல்லைவரை தமிழ் சமூகம் 'மைனர்' என்று பெருமைப்படுத்தியது. (விபச்சாரகன் இங்கு என்னுடைய பதம்.) ஆக, ஆண்களின்றி பெண் தனித்து வாழமுடியாது. சிறுமியாய் இருக்கும்போது தகப்பனிடத்திலும் பருவத்தில் கணவனிடத்திலும் வயதான காலத்தில் மகன்களின் பொறுப்பில் மட்டுமே பெண்கள் இருக்கவேண்டும் என்ற மனுதர்மத்தையே வேறு வார்த்தைகளால் ஆண்கள் முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதை அடியொற்றியே நம்பியின் வார்த்தைகளும் வந்திருக்கிறது.

'பெண்மைக்குரிய நல் இயல்பு’ பற்றி பேசும் முன், முதலில் நல் இயல்பு என்றால் என்ன, அது யாருக்கான நல் இயல்பு, அதனால் சம்பந்தப்பட்ட இரு உயிர்களுக்கும் சமமான உரிமையும் மகிழ்ச்சியும் சுயமரியாதையும் சுதந்திரமும் எஞ்சுகிறதா, அல்லது அது ஒருவழிப் பாதை மட்டுமா என்பதையே பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள். பெண்ணியம் என்றால் என்ன என்பதைக்கூட ஆண்களின் தேவை கருதித்தான் பேசவேண்டுமா. இது அதிகாரமில்லையா.

ஆணும், பெண்ணும் மட்டுமல்ல அந்த ‘வரையறைக்குள்’ அடங்காதவரும், மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் நுண்ணிய வேறுபாடுகளுடன் பிறந்தவர்கள், பிறப்பவர்கள். தற்போதைய சமூக அமைப்பு (ஆணாதிக்கச் சமூகம் என்று சொல்ல விரும்பாவிட்டால் இப்படி வைத்துக் கொள்ளலாம்) அப்படிப்பட்ட நுண்ணிய வேறுபாடுகளை பொது “அளவுருக்குள்” (parameters) அடக்கி, அதற்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி, அதை நோக்கிய பற்றை வெறியோடு வளர்த்துவிடுகிறது. இது பல்வேறு வகையான மனநெருக்கடிகளுக்கு ஒருவரைத் தள்ளி, சமூகக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறதேயன்றி, பெண்கள் ஆணுக்கு அடங்க மறுப்பதால் அல்ல. கற்பு நெறி, கணவனைத் தொழுதல் ஆகிய சிந்தனைகள் பெண்ணை வெறும் உற்பத்திப் பண்டமாகவும், குடும்பம் எனும் அமைப்புக்கான, அதிலும் ஆண்களுக்கு ஒரு சொகுசுக் கருவியாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

சுதந்திரம் பேசும் பெண்கள், பெண்ணியவாதிகள் பாலியல் சுதந்திரம்தான் கோருகிறோம் என்று “முழு நிறைவான” ஆணைக் கட்டமைத்த ஆணாதிக்கத்தின் கைப்பிள்ளையாய் ஆண்கள் இன்னமும் எத்தனைக் காலம் பெண்ணிய சிந்தனைகளை, பெண் விடுதலைப் போராட்டங்களை திசை திருப்பப் போகிறார்களோ. ஆண்களுக்கு அச்சுதந்திரம் எழுதா விதியாக இருக்கிறது. பாலியல் உறுப்புக்காகவும் உற்பத்தி சக்திக்காகவுமே தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறியும் பெண்கள் ‘கற்பு’ சிந்தனையைக் கட்டுடைக்க அதை விமர்சித்துப் பேசுவது ஆண்களுக்கு இடைஞ்சலாக இருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. ஆண்கள் தலைமையில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள் மனித விடுதலைக்காக, பெண்கள் தலைமையில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள் “பாலியல் புரட்சிக்காக” எனும் திரிபு இனியும் விலை போகாது. அறிவியல், மருத்துவம், கல்வி இன்னும் பிற துறைகளில் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் ஏன் பெண்கள் விசயத்தில் மட்டும் முரண்டுபிடிக்கிறது. சொல்லாமலேயே ஆணுக்கு எல்லாச் சுதந்திரங்களும் கிட்டிவிடுகிறது, பெண் அனைத்தையும் போராடியே பெற்றிருக்கிறாள். இன்னமும் போராடி வருகிறாள். இதை சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்கவாதிகளின் கட்டுக்கதையே பெண்ணியவாதிகள் "ஒழுக்கங்கெட்டவர்கள்” எனும் கருத்தாடல். கணவனை இழந்த பெண் மொட்டையடிக்கப்பட்டு, பல் பிடுங்கப்பட்டு, வெள்ளைப் புடவையுடன் மட்டுமே வாழவேண்டும் என்பதுபோல் ஆணுக்கு அத்தகைய விதிகள் எதுவும் இல்லையே. ஆண்களின் அகராதிப்படி மெல்லினமான பெண்ணுக்கு வல்லின ஆண், ஏன் இத்தனை ‘வன்மையான’ தண்டனை கொடுக்கவேண்டும்?

முதலில் தனி மனிதர் ஒவ்வொருவருக்குமான உரிமைகளை சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருவர் இணையும் ஓர் அமைப்புக்குள் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு குறித்து உரையாடுவது முரண் நகை; .அது பயனற்றது. ஒவ்வொரு உயிரினத்திற்குமான தனிமனித உரிமைகளை முதலில் வரையறுப்போம். இதுவரை ஆணாதிக்கம் கட்டமைத்துள்ளவற்றை புறந்தள்ளிவிட்டு பகுத்தறிவுகொண்டு உருவாக்கப்படவேண்டிய ஒன்று அது. பிறகு, இருவர் சேர்ந்து இணையும் ஓர் அமைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை சம்பந்தப்பட்ட இரு துணைகள் தீர்மானிக்கட்டும். பொத்தாம்பொதுவாக சமூக அமைப்பு எனும் நிறுவனம் தீர்மானிப்பது என்பது லாப நோக்கம் சார்ந்த செயல்பாடாக இருக்குமேயன்றி மனித நேய அடிப்படையில் இருக்காது.

ஆண்களால் ஏற்படக்கூடிய உடல் சிதைவிலிருந்து காத்துக் கொள்ளவே பல பெண்கள் திருமணம் செய்யும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், அந்நிறுவனமும் அவள் மீது வன்முறையை வெவ்வேறு வழிகளில் ஏற்றிவைக்கிறது. இந்த பாதுகாப்பின்மை குறித்து க.சி.அகமுடைநம்பியின் கட்டுரை எந்தக் கண்டனங்களையும் எழுப்பவில்லை என்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்பொழுது வல்லின ஆண்களால் முதலில் சிதைவுறுவது மெல்லின பெண்களின் பிறப்புறுப்புகள், குழந்தைகள். மாறாய் பெண்களோ, பெண்ணியச் சிந்தனை உள்ளவர்களோ, அத்தகைய அழிவுகளை ஏன் செய்வதில்லை? ஆண் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் இடங்களில் எல்லாம் முதலில் அவன் கைப்பற்றுவது பெண்ணின் உடலைத்தான் என்பதை வரலாற்றில் பதியப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான சிங்கள நாட்டில், அவ்வரசு செய்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை க.சி.அகமுடைநம்பி கண்டிருப்பார் என்று நம்புகிறேன். அதிகார நாட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியாவதற்கு ஆணாதிக்கம் கண்டுபிடித்த கருவிகளும், ஆயுதங்களுமே காரணம் என்பதற்கு மாற்றுக் கருத்து இருந்துவிடமுடியாது.

மனுதர்மமும், இதர பார்ப்பனிய வேதங்களும் நால் வர்ணங்களின் பெயரால் மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடிமைப்படுத்தி அதை அவன் நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் வைத்தது. ஒரு காலகட்டத்திற்கு மேல் அதன் உண்மைகள் கண்டறியப்பட்டு ஒடுக்கப்பட்ட இனமானது தனது விடுதலைக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களைக் கையில் எடுக்கவில்லையா. அதுபோல் ஒடுக்கப்பட்ட இனமான பெண் இனமும் தான் பிறப்பின் அடிப்படையில் மென்மையானவள் அல்ல; அது ஆணாதிக்க தீர்மானம் என்று முழங்குவது எவ்வகையிலும் தவறில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக, ஆண்களால் ஒடுக்கப்பட்ட பெண்ணினமானது கடந்த 40 ஆண்டுகளில்தான் கல்வி, பொருளாதாரம் ஆகிய சுதந்திரங்களைப் பெற்றிருக்கிறது. அச்சுதந்திரத்தை அனுபவிக்கும் வழிமுறைகளில் சில தவறுகள் நேரலாம், அதை விவாதிக்கலாம். அதிலும் பெரும்பகுதி தவறுகளுக்கு முழு நிறைவான ஆண்களே காரணமாக இருப்பதுதான் இன்னும் துயரம்.

இத்தனை புள்ளிவிவரங்களைக் கொடுத்தும் ஆணாதிக்கம் எங்கிருக்கிறது என்று நம்பி சொல்வது, ஆண்மை பெண்மை பற்றிய கருத்தாக்கங்கள் அழியாதவரை ஆணாதிக்கத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்பதற்கான ஆதாரச் சான்று. .

க.சி.அகமுடைநம்பியின் எதிர்வினையை முழுவதும் வாசித்த பின்னர் அது உணர்த்துவது “பெண்களுக்கென்று சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதை அப்படியே பின்பற்றுங்கள். அதுவல்லாத காரணத்தால்தான் தீவிரவாதம் பெருகி சமுதாயமே சீரழிகிறது. பெண்களாகிய நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நான் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்” எனும் ஒப்புதல் வாக்குமூலமும்தான்.

இதற்கு ஒற்றைவரியில் நீங்கள் ஆணாக ஆண்மையுடன் இருந்துகொள்ளுங்கள். ஆனால், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தீர்மானித்துக் கொள்கிறோம் என்று முடித்திருக்கலாம்தான். ஆனால், ஆண்கள் செய்வதையே திரும்பச் செய்வதென்பது பெண்ணியச் சிந்தனையாகாது எனும் முழுமுற்றான எனது நம்பிக்கை 'பெண்ணியம்’ குறித்தான புரிதலை நோக்கி உரையாடலை தொடரச் செய்கிறது.

(இம்மாத உயிர் எழுத்தில் வந்துள்ளது)

நன்றி- சாவின்உதடுகள்.

பெண்ணியம் உரையாடலுக்கான தொடக்கம் கட்டுரைகளை சாவின் உதடுகள் பதிவுத்தளத்தில் காணலாம்

பெண்கள் மீதான வன்முறைகள் சில அதிர்ச்சித் தரவுகள்



- நிஷா

பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.

அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.

10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப் பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.

பெண்களும் சனத்தொகையும்

உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக் கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.

குடும்பத்தில் வன்முறை

குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாகக் காணப்படுகின்றன.

உலகம் பூராகவும் நிலவும் நிலை

* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.

* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.

* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.

* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.

* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் படுகின்றது.

* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.

* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.

* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.

* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.

பாலியல் வன்முறைகள்

* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.

* தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக் கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.

உலகில்...

* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.

* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றாள்.

* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றார்கள்.

யுத்தமும் பெண்களும்

யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.

* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.

* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.

* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.

* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.

தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள்

உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.

உலகம் முழுவதிலும்

* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன் பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.

* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.

* எகிப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.

* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.

* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.

* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.

* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர்.

குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை

பெண்களுக்கெதிரான வன்முறைகள் பதிவு செய்யப் படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

உலகில்...

* சிலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 3சத வீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.

* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கு எதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.

* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.

* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதை எவருக்கும் சொல்வதில்லை.

* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

சட்ட நிவாரணங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றார்கள். இவ்வன்முறைக்கு எதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப் படுவதில்லை.

* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.

* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.

* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.

எச். ஐ. வி. / எயிட்ஸ்

பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.

உலகில்

* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சத வீதமானவர்கள் பெண்கள்.

* புதிய எச். ஐ. வி. தொற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.

* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.

* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.

- நிஷா
Quelle - Thinakaran

பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..? சந்திரவதனா




எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு
சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.

பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.

பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇன
இளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.

அது உண்மைதான்.
பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.

இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது.

ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது
பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.

இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,
மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.

இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.
இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.
பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.
காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்.

இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.
அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள்.
ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.

ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.

இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.

இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல்எழலாம்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.

கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.

இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.

இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.

காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
28.2.2004

பிரசுரம் - ஈழமுரசு (3.3.2004 - 9.3.2004)

பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை - புதியமாதவி



புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.

பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.

பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.

பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

ஆண் -பூப்படைதல் சடங்கு

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.

தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.

ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:

பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

சங்க இலக்கியத்தில் பூப்பு

பெண் பூப்படைதல் சடங்குகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் விரிவாக இல்லை. தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில்

"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீததகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான" (நூற்பா 1133)

என்று மணமான பெண்ணோடு கணவன் புணரும் காலம் குறித்த தகவலைப் பதிவு செய்துள்ளது. இவ்விடம் குறிக்கப்படும் பூப்பு குழந்தைப் பருவத்து பெண் கருத்தரிக்கும் பருவத்திற்கு மாறிவிட்டதைக் குறிக்கும் பூப்பன்று.

பெண்ணின் முதல் பூப்பு, அதனை ஒட்டிய சடங்குகள் குறித்து ஒரேயொரு புறநானூற்றுப் பாடல், மகட்பாற் காஞ்சித்துறைப் பாடல் (337:6:12) குறிப்பிட்டுள்ளது.

"பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்"

பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள் மனைச் செறிக்கப்பட்டாள் என்று இப்பாடல் பதிவு செய்துள்ளது.

காண்டற்கரிய பாலியல் பொலிவு, நுடக்கம், அகில் நறும்புகை, மனைச்செறிப்பு ஆகியவை சங்க காலத்தில் பூப்பு எய்தியதை ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள் எனலாம். வேறு விளக்கமாக அறிந்திட சான்றுகள் இல்லை.

சடங்குகளூம் சமூக மாற்றங்களும்

அறிவியலும் கலை இலக்கியமும் "உண்மைகளை" வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றன. சடங்குகளும் அவ்வாறே பேசுகின்றன. மானிட வாழ்க்கையின் இருத்தலில் ஓர்மை மனதுக்கு (conscious mind) எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அந்த அளவிற்கும் குறையாமல் ஓர்மையற்ற மனதுக்கும் (unconsciousmind) பங்கு உண்டு. ஓர்மை மனதை அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றொடு சம்பந்தப்படுத்துவதைப் போல ஓர்மையற்ற மனதை சடங்குகள், கலை இலக்கிய படிமம் ஆகியவற்றோடு சம்பந்தப் படுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்த சடங்குகள் மாந்தரைச் சமூக வயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளன: என்பார் ராஜ்கவுதமன்.

இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த அர்னால்டு வான் கென்னப் (Arnold Van Gennep) அவற்றை ஒரு குடும்ப/சமூக/பாத்திர நிலையிலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழு மற்றொரு குடும்ப/சமூக/ பாத்திர நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் (Rites of passage) என்று குறிப்பிடுவார். "தமிழர் மானுடவியல் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன " என்பார் பக்தவச்சலபாரதி- (தமிழர் மானுடவியல்) இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப/சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள்.

பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு ஆண் பொறாமை அடைகிறான். அச்சம் கொள்கிறான். பெண்ணின் மறு உற்பத்தியை பெண் மூலமாக ஆண் அறிய வேண்டி இருப்பதால் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிரமாக சிந்திக்கிறான். தாய்வழிச் சமூக அதிகாரம் தடை செய்யப்பட்டு தந்தை உரிமைச் சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்த கொண்டாடப்பட்ட பெண்ணின் பூப்பு தீட்டாகி விலக்கி வைக்கப்படுகிறது. எதைக் கண்டு ஆண் அச்சப்பட்டானோ அதையே காரணமாக்கி பூப்பு, பெண்ணின் மறு உற்பத்தி உறவு, மகப்பேறு அனைத்தும் அவள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட சமூகக் காரணிகளாக மாறியது.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் பெண்ணைப் பற்றி பெண்ணின் சமூகத் தகுதி நிலையைப் பற்றி விளக்கும் போது உயிர் உற்பத்தி செய்வதிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குவதிலும் சுதந்திரமாகவும் சம உரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் முதலாளித்துவ போக்கினாலும் தனிச்சொத்துரிமையாலும் துணைநிலையினரகவும் சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றி நிகழ்ச்சியில் தவிர்க்கவியலாத மாற்றமாகியது என்று விளக்குகின்றனர்.

தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும். இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "ப்ழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் இன்றைய மத நம்பிக்கைகள் , தந்தை வழி ஆணாதிக்க சமூகம், முதலாளித்துவம் அனைத்தும் பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டங்களாக்கிவிட்டது தான் உண்மை. சாதியக் கொடுமையை உணர்த்தும் தீண்டாமை, தீட்டு போன்ற சொற்கள் பெண்ணின் கொண்டாட்டத்திற்குரிய பூப்படைதலுடன் தொடர்புபடுத்தி தீட்டாகிப் போனது. பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது. பெண் தீட்டாகிப் போனாள்., தீண்டத்தகாதவளாகிப் போனாள். பெண் அடிமையாகிப்போனாள். எனவே தான் பெண் பூப்படைதலைக் கொண்டாடுவதும் விளம்பரப்படுத்துவதுமான சடங்குகள் அவளை அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் ஐயமின்றி ஒட்டுமொத்த பெண் விடுதலை விரும்பிகளும் பூப்பு நீராட்டு சடங்குகளை எதிர்க்கிறோம்.

பழமை என்பதால் பாதுகாக்கலாம் அருங்காட்சி அகத்தில். அதைப்போல தான் பழமையான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும். சடங்குகளின் வேர்களைத் தேடி மனித வரலாற்றை ஆய்வு செய்யலாம். தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும்,.

வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.

- கவிஞர் கனிமொழி -

துணைநின்ற நூல்கள்:

1. பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ்கவுதமன்.

2. welcome to womenhood - sharon supriya

நன்றி - கீற்று


தென்னாப்பிரிக்காவில் மாணவர்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை





தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள வடக்கு குவோசுலு நட்டால் எனும் பரதேசத்தில் சில பாடசாலைகளில் மாணவர் மாணவிகளிடையே கன்னித்தன்மை பாpசோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறம் சார்ந்த பாடசைகளில் ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் பின் கன்னித்தன்மையுடையவர்களென கல்வித் திணைக்களம் சான்றிதழ் கூட அளித்துள்ளது. ஆசிரியர்களாலேயே நடத்தப்படும் இந்தப் பரிசோதனைக்கு பெற்றோர்களின் பூரண ஆதரவு இருந்திருக்கிறது. அத்துடன் இந்த பரிசோதனை 6 வயதடையவர்களிடம் கூட நடத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சான்றிதழ் புதுப்பிக்கப்படுவதற்காக மீண்டும், மிண்டும் இந்த சோதனை நடத்தப்படுவதாக தென்னாப்பிரிக்காவில் வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

மாணவர்கள் சிறுநீர்கழிப்பதை அவதானித்தும், அவர்களின் முழங்காலுக்குப்பின்புறம் மற்றும் ஏனைய சில இடங்களில் தோல்களும் பரிசோதிக்கப்படுகின்றன.

பெண்களுக்கு பெண் ஆசிரியைகளாயே பாpசோதக்கப்படுவதோடு அவர்கள் கன்னிச்சவ்வையும் பரிசோதிக்கிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் தரும் விளக்கம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்படும் சோதனையென்றே. சூலு இனத்தவர்களின் மரபில் திருமணத்திற்கு முன் பாலுறவு மரபை மீறும் குற்றமாகும்.

இந்தப் பரிசோதனைக்கு எவரும் வற்புறுத்தப்படாததாகக் கூறப்பட்டபோதும், கல்வித் திணைக்களம் இந்தப் பரிசோதைனையை மேற்கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறது. கொம்பின்பிண்டோ எனும் பள்ளிக்சுடத்தில் 747 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 500 பேர் சித்தியடைந்திரக்கிறார்களாம். கொப்பும்லொண்டோ எனும் பள்ளிக்கூடத்தில் 840 போpடம் நடத்தப்பட்ட சோதனையில் 250 பேர் தான் சித்தியடைந்திருக்கிறார்களாம்.

”நான் பரிசோதித்த 3000 மாணவர்களில் 135பேர் சித்தியடைந்திருக்கிறார்கள்” என மாலிங்கா எனும் பாசாலை அதிபர் குறிப்பிடுகிறார்.

பிலிசீவி எனும் ஆசிரியை குறிபிடுகையில் தான் மாணவர்கள் மத்தியில் அசெம்பிளியில் உரையாற்றும் போது தான் கனனித்தன்மையுடைவள் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடுவதாகவும், எனக்கு வழங்கப்பட்டுள்ள கன்னித்தன்மை சான்றிதழை நான் சகலருக்கும் பெருமிதத்துடன் காண்பிப்பதாகவும், தனது கனவனுக்கான தனத அன்பளிப்பாக அந்த சான்றிதழை தான் அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

14 வயதுடைய தமிலூலி மாணவி குறிப்பிடுகையில் ”நான் இரண்டு சான்றிதழ்களை வைத்திருப்பதையிட்டு பெருமைகொள்கிறேன். எனது வகுப்பிலுள்ள 28 மாணவர்களில் 20 பேர் தூய்மையானவர்கள்”

20 வயதுடைய நெலிசிலி எனும் உயர் கல்வி மாணவி குறிப்பிடுகையில் 15 பேருள்ள தனத வகுப்பில் தானும் தனது நன்பியும் தான் தூய்மையானவர்களென்றும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை தனது படுக்கையறைச் சுவரில் மாட்டி வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆசிரியர்கள் தங்களது கடமையை நன்றாகச் செய்கிறார்கள் என்றும் அவர்கள் தனக்கு விருப்பமானவர்கள் என்றும் அந்த மாணவி மேலும் தெரிவிக்கிறார்.


நன்றி :
தென்னாப்பிரிக்க சண்டே டைம்ஸ்


தாலி பற்றி பெரியார் சொல்கிறார்




பொன்மொழிகள்


பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,
அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,
இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.
புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,
இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.
ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்
கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை
பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும்
பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால்
அறுத்தெரியட்டும். அல்லது -
புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.
தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்
கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.
—————————–
பெரியார் கேட்கிறார்?
நமது இலக்கியங்கள் யாவும்
நியாயத்திற்காக, ஒழுக்கத்திற்காக
எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு
என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ!
அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும்
வைத்திருக்க வேண்டுமல்லவா?
——————————————–
பெண் அலங்கரிக்கப்பட்ட பொம்மையா?
ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி,
ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி,
ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு
ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.
ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும்
ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை
என்பதல்லாமல் பெண்கள் பெரிதும்
எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்-
என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர
மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில்
வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே
இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன்
இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இழி நிலை
பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லையா?
ஆகவே ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டுழியமாய்
நடத்தலாமா? என்று கேட்கிறேன்.
———————————————————–
பெரியார் சொல்கிறார்!
மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய
யோக்கியதையே எடுத்துக் கொண்டால்
அவர்கள் எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும்
எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும்-
தொழில் திறமையும் கொண்ட சக்தியையும்
உடையவர்களாய் இருக்கின்றார்களே ஒழிய,
இந்திய ஸ்தரீ ரத்தினங்கள் கோருகிற மாதிரி
சங்கீதம்- கோலாட்டம்- பின்னல்- குடும்ப சாஸ்திரங்கள்
ஆகியவைகளைக் கற்று சீதையைப் போலவும்,
சந்திரமதியைப் போலவும், திருவள்ளுவர்
பெண் ஜாதியான வாசுகியைப் போலவும்-
நளாயினியைப் போலவும் இருக்கத்
தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள்.
———————————————————
திருமணங்கள் மதத்தைப் பாதுகாக்கவே…
திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல.
உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது.
இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ,
பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக
ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும்
மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள்.
இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள்
நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம்.
இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம்
மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன.

சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை



கடந்த மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.

அவர் குறிப்பிட்டது இது தான்,

'தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவுபுரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.”

டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

”சமீபத்தில் தயயொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித்தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வத ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.

சிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி, பேசி வந்திருப்பவரும் கூட. 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பாரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டு¬ரையொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.

சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Living togrther), இரு கனவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திரக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.
சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.

இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக்கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.

சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொருத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தெரியாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.

இந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.

கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.

அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)

சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.

சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பாhக்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில் வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்றசாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினரிடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாயபூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்தியதரவர்க்த்தினரிடமே திருமணச்சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச்சமூகத்தில் வணணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து சுருங்கி வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே உடுதுணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் உடுதுணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். ”பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார்.

உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த உடுதுணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.

திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிரூபிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்.

எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நோpடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.

சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் ”றெதி நெந்தா” அழைத் துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் ”தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) இது மேற்கொள்ளப்படும். இதற்குhpய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.


1. மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்படுவாள்.

2. மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.

3. மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார்.

4. மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும்.

5. மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப்பெண்ணை வரவேற்பாள்.

வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரிட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அப்பாவிப்பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடம்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தம் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது ”பரிட்சையில் தேறாத' மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில..

1. இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.

2. மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.

3. வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.

4. சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.

5. மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.

6. உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.

7. அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள்.

8. வாழைப்பழத்தை அடியியிலிருந்து தோலுரித்தல்.

9. விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அரிதாகவே நடக்கும்.)

”தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் ”கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இட்ளில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.

சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூ}ய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள” மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.

அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திhpகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

”கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ”முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது.

எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழநேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பஙிகளால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனத கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

”ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னிததன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பார்க்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தொpயாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.

இலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.

இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். 'ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்?”

1. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்.

2. The Island 2000 மே,யூன் பத்திரிகைகள்.

3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு

4. உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை

5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம்

6. க்ரியா தற்கால தமிழ் அகராதி.

6. http://www.suntimes.co.za/1998/05/17/news/nets05.htm

கற்பு - ஒழுக்கம் - பாலுறவு





கற்பு - ஒழுக்கம் - பாலுறவு:

புனைவுகள்
என்.சரவணன்

பாலியல் குறித்த விடயங்கள் புலமைத்துவ மட்டத்தில் பேசுபொருளாக ஆக்கப்பட்டு வருகிறது. இதே வேளை பெண்களின் மீதான பாலியல் வன்முறைக¬ளின் சமீபகால அதிகரிப்பையும் அதன் கொடுரத்தையும் கூடவே அறிந்து அனுபவித்து வருகிறோம்.


இளையதம்பி தர்சினி (வயது 20) எனும் பெண் இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் 18 அன்று கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து பின் கல்லொன்¬றுடன் கட்டி கிணற்றொன்றில் போட்டிருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். இந்தச் செய்தி வெளியான போது கூடவே இந்தப் பெண்ணின் ஒழுக்கப்பண்புகள் குறித்த செய்தியும் சிலரால் பரப்பப்பட்டன. படையி¬னரின் இந்த காடைத்தனத்தை மூடிமறைக்க அரச இயந்திரமும், போpனவாத கட்டமைப்பும் அப்பெண்ணின் ஒழுக்கப்¬பண்புகள் மீது கேள்வியெழுப்பும் வண்ணம் கதைபரப்பியதை பெண்கள் அமைப்புக்கள் கண்டித்தன.

இத்தனை கோரத்தனத்தின் பின்னும் கூட அதிகாரத்துவம் படைத்த ஆணாதிக்கம் தனது ”ஆண்மைத்துவ” செய்கையை மறைக்கவென, பலியாக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் மோசமாக சித்தரித்து அக்காடைத்தனத்தை நியாயப்படுத்தவோ அல்லது அதனை சமப்படுத்தவோ முனைவதைக் காண்கிறோம்.

இதுவரை காலமும் பாலியல் வல்லுறவுக்¬குள்¬ளான பெண்ணை ஆபாசமான உடைய¬ணிந்¬திருந்தாள், ஆபாசமாக காட்சி தந்தாள், மோசமான இடத்திலிருந்தாள், பிழையான பாதையில் வந்தாள், பிழையான நேரத்தில் வந்தாள் என வல்லுறவுக்கு நியாயம் சொல்லும் வழக்கம் சாதாரண சமூக பேச்சாடலில் மாத்திரமல்ல, சட்டத்தின் முன் கூட காணப்படுகிறது. இது ஒரு சட்ட வலுவாகவும் எதிரிக்கு சாதகமாக அமைந்த எத்தனையோ வழக்குகளைக் காண முடிந்திருக்கிறது.

எனவே தான் இந்த கற்பொழுக்கம் குறித்தும் பாலுறவு குறித்தும் நிலவுகின்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகிறது.

பெண்ணின் உயிhpயல் அம்சமான பாலுறுப்புகள் மீதான அதிகாரத்துவத்துக்கு ஆணாதிக்க மரபு வழிவந்த சமூக-பண்பாட்டுக் காரணிகள் முக்கியத்துவம் செலுத்துகின்றன.


ஆண்மை-பெண்மை குறித்த மரபுப் புனைவுகளின் வாயிலாகவும், ஐதீகங்களின் வாயிலாகவும் இது பலமாக வேரூன்றியுள்ளன. இவற்றை எமது கல்வி, தொடர்பூடாக, மத விவகாரங்கள் பாதுகாத்து, வற்புறுத்தி வந்துள்ளன.

தனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க வேண்டியவளாக பெண் பழக்கப்படுத்தப்பட்¬டுள்¬ளாள். பாலியல் பற்றிய புரிதல் பெண்க¬ளுக்கு மறுக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்¬பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பாலியலா¬னது இரகசியத்துக்கும், அந்தரங்கத்¬துக்கும் உரிய ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குறித்த வேட்கைகள், நாட்டங்கள் செயற்கைத்தனமானதாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. பேசாப்பொருளாக வைத்¬தி¬ருக்¬கப்பட்டாலும் கூட அது பெண்களுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்¬பட்டது. பெண்கள் மத்தியில் இவை பேசாப் பொருளாக இருக்கும் வரை அவர்களின் பாலியல் வேட்கைகள் தணிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆணாதிக்கச் சூழலில் நிலவுகின்றது.

ஒரு தாரமணம், குடும்பம், வம்சாவழி, ஒழுக்க மரபுகள் என்பன தனிச்சொத்துட¬மையின் வழிமுறைகள். இதில் ஒரு தார மணமானது தந்தை வழிச்சமூகத்தின் இருப்புக்கு (அதாவது தனது விந்தின் விளைவே¬யென்பதை நிறுவுவதற்கு முன்நிபந்¬தனையாக திகழ்கிறது.) அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட குழந்தை தனது ஆண்மைத்துவத்தின் விளைவு-வெளிப்பாடு எனக் கருதுகிறது.

எனவே தான் ஆணாதிக்கமானது ”கற்பு” என்பதை பெண்ணின் மீதான விதியாக ஆக்கிய அதே நேரம் ஆணின் ”கற்பு மீறலை” அது தனது ஆண்மையின் வெற்றியாகவும் நிறுவி விட்டிருக்கிறது.

இந்த கற்பொழுக்கமானது வரலாற்று பூர்வமாகவே பெருங்கதையாடலாக சித்திரித்து வரப்பட்டுள்ளது. அதன் விளைவாக இது இன்றும் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலின் மத்தியில் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் வைதீக பிற்போக்கு சக்திகளால் காலாகாலமாக காயடிக்கப்பட்டு வருகின்றன.

பெண்ணின் இந்த கற்பொழுக்கத்துக்கு பெண்ணின் மீதான ”யோனி மைய வாதம்” ஆற்றுகின்ற பாத்திரம் கரிசனைக்குரியது. இது தான் பெண்ணின் மீதான இயற்கையான உயிரியல் ”கொடுமை”. இனப்பெருக்க மையமாக அமைந்திருக்கிற உயிரியல் இயல்பை பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக இது ஆகியது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண்-பெண் உறவு கட்டமைக்கப்பட்டு குடும்ப அமைப்பு எனும் அதிகாரத்திற்கு ஒடுக்கியது. ”ஒருத்திக் கொருவன்” எனும் சித்தாந்தத்தை பெண்ணுக்கு திணித்தது. இவை கெடாம¬லிருக்க ஒழுக்கநியதிகள், கண்காணிப்புகள், விட்டால் போதுமென்ற உடனடித் திருமணங்கள்,

ஆணுறுப்பு லிங்கமாகவும் வழிபாட்டுக்¬குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. (இது எப்படி வழிபாட்டுக்கு வந்தது என்பதை பெட்டியில் உள்ள கதையைப் பார்க்க) அதற்கு கோவில் கட்டி கும்பிடுகின்ற அதே நேரம் பெண்ணின் யோனியானது தீட்டு, தூய்மை, துடக்கு, விலக்கு, அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்கின்ற புனைவுகளையும், அதன் மீதான வெறுப்¬பையும் ஏற்படுத்தியுள்¬ளது.

பாலுறவு தவிர்த்தால் யோனியை ஒரு வேண்டத்தகாத ஒன்றாகவே ஆணாதிக்க சூழல் கற்பிதம் கொண்டிருக்கிறது. இன்றுள்ள தூஷண வார்த்தைகளைப் பார்த்தால் இதன் விளை¬வினை விளங்கிக் கொள்ள முடியும். நிலவுகின்ற தூஷண வார்த்தைகள் அனைத்¬துமே பெண்களின் பாலுறுப்புகளைக் குறித்து கேலி செய்கின்றவையாகவே உள்ளன. இதன் மூலம் வேண்டாதவரை அவமானப்படுத்த முடியும் என்கின்ற ஐதீகம் நிலவுகிறது. ஒருவரைத் துன்புறுத்த முடிவு செய்தால் எதிhpக்கு நெருக்கமான பெண்ணின் (தாய், சகோதரி, மனைவி) பாலுறுப்புகள் மீது கேலி செய்தால், அவமானப்படுத்தினால் கோபம் கொள்ளச் செய்யலாம் என்கின்ற ஐதீகமும் நிலவுகிறது.

அதே வேளை இதே யோனி புனிதம் கெடா¬மல் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்¬புகளும், அவற்றுக்கான விதிகளும் கட்டுப்பா¬டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் பாலுறவுத் தொடர்புகள், ஆண்மையின் சிறப்பாகவும் பெண் தனது கணவனைத் தவிர்ந்த எவ¬ருடனும் வைத்துக் கொள்கின்ற பாலுறவுத் தொடர்புக¬ளினால் அவளது ”கன்னித்தன்மை” புனிதம் கெட்டதாகவும், கற்பிழக்கப்பட்¬டதாகவும், நடத்தை கெட்டதாகவும், ஒழுக்க மீறலாகவும் புனை¬யுமளவுக்கு கருத்தியல்கள் கட்டமைக்கப்¬பட்டுள்ளன.


இன்றும் பாலுறவானது விஞ்ஞான பூர்வமான பரஸ்பர புரிதலுடனான கூட்டுச் செயற்¬பாடாக இல்லை. பாலுறவின் போது பெண்ணானவள் வெறும் போகப் பொருள் மாத்திரமே ஆண் விரும்பிய போது ”சகலவற்றையும்” சகித்துக் கொண்டு இசைந்து கொடுக்கும் இயந்திரம் மாத்திரமே.

எனவே இந்த யோனி மையவாதம் தான் யோனியை மையமாகக் கொண்ட பாலுறவுக்கு அப்பால் - எல்லாமே வக்கிரம் என்ற புனைவை¬யும் ஏற்படுத்தியது.
எதிர்பாலுறவுக்¬கூடாகத்¬தான் (retro sexual) பாலியல் இன்பம் கிட்டும் என்கின்ற புனைவுகளும் இதன் வெளிப்பாடே. எனவே தான் பின்னர் புட்ட உறவு, வாய் உறவு மற்றும் ஒரு பாலுறவு வரை எல்லாமே அபத்தமானதா¬கவும், வக்கிரம் கொண்டதாகவும், இயற்கைக்கு முரணானதாக¬வும், சட்டவிரோதமானதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது ஆணின் பாலாதிக்கத்¬துக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் நிலவுகின்ற சமூக அமைப்பைப் பொறுத்தளவில் தனது சொந்த பாலுறுப்பு தவிh;த்து ஏனையோரின் பாலுறுப்புக்களை அருவருப்பாக பார்க்கின்ற உளவியல் ஆண்களிடம் இருப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, பெண்கள் இருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளுக்கு குண்டி கழுவுவது முதல் கொண்டு ஏனையோரின் உள்ளாடைகளை கழுவுவது மற்றும் குழந்தைகள், பிள்ளைகளின்-ஏன் வீட்டிலுள்ள அனைவரதும் பாலுறுப்புகள் உள்ளிட்ட சுகாதார மருத்துவ விடயங்களில் அக்கறை கொள்வதும், ஏன், சொந்த பாலுறுப்பு மீதான சுகாதார மற்றும் மறு உற்பத்தி குறித்தும் சகல வழிகளிலும் பெண்ணே, பொதுவாக எந்தவித அருவருப்¬புக்¬குமுள்ளாகாமல் சகிப்புடன் பாலுறுப்பு நலன்களில் ஈடுபாடு கொள்ள கற்பிக்கப்பட்¬டுள்ளாள். இப்படியான பொறுப்¬பு¬க¬ளி¬¬லிருந்து விலகி வரும், ஆணாதிக்கத்திடம் இப்படிப்¬பட்ட அருவருப்புகள், வெறுப்¬புணர்வுகள் இருப்பது குறித்து பின்னென்ன ஆச்சரியப்¬பட இருக்கிறது.

எனவே தான் இந்த கற்பு, கன்னித் தன்மை, போன்ற மரபான ஐதீகங்கள் இன்று பாலியல் வல்லுறவை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. சமூகத்தில் உள்ள பாலொடுக்¬குமுறைகளை இனங்காணாமல் செய்து விடுகிறது. குடும்பத்தில் கணவனால் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படு¬கின்ற வேளைகளில் அது அவனின் உரிமையாக கொள்ளப்படுகிறது. பெண்கள் அதனை சகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்¬படுகிறது. இருக்கின்ற ஆணாதிக்க கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்ளச் செய்துள்ளது. இந்த கட்டமைப்பின் மீதான மீறல் மேற்கொள்ளப்¬படுமாயிருந்தால், மீறியவளை நடத்தை கெட்டவளாக ஆக்கிவிட்டுள்ளது.

பாலியல் குறித்த இந்தப் புனைவுகளைத் தகர்ப்பதே பெண் விடுதலையை சாத்தியமாக்கும்.

இன்றைய பெண்கள் மீதான வன்முறைக¬ளில் பாலியல் வன்முறையானது அதிகரித்து வருவதானது அதிகாரமற்ற பாலாரின் மீதான ஆண்களின் கையாலாகாத்தனத்தையே குறிக்கிறது. அதிகாரத்துவத்தின் அடக்கு¬முறைக்குள்ளாவதால் அதிகாரம் முதலில் அவசியம். இன்று இந்த அதிகாரத்துக்கான ஒரு பயணத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்¬கிறது. ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பயணத்தில் தங்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றுவது, விடுதலையில் அக்கறையுள்ள அனைத்து பெண்களினதும் கடமை.

என் உடல் மீதான உரிமை என்னதே




என் உடல் மீதான உரிமை என்னதே!

"பெண் மீதான அடக்குமுறையின்
அடிப்படை பாலியலிலிருந்தே
ஆரம்பிக்கப்படுகிறது"

-குமுதினி சாமுவேல்-

என்.சரவணன்


பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இன்று அதன் இணைப்பாளராகவும் உள்ள குமுதினி சாமுவேல் நீண்ட காலமாக பெண்ணியம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு வருகிறார். 80களின் ஆரம்பத்தில் சுதந்திர வர்த்தக வலய பெண்களின் தொழிலாளர் போராட்டத்தின் முன்னோடியாக இருந்தவர். பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமானவர். பெண்களின் மீதான அடக்குமுறைகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகை செய்திகிளினூடாக கண்காணித்து அவை குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வரும் ''பெண்ணுரிமைகளின் கண்காணிப்''பின் ஆசிரியராகவும் இவர் இருக்கிறார். பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவரும் இவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு அறிக்கையிட்டு வருவராகவும் இருந்து வருகிறார். மேர்ஜ் அமைப்பின் தேசியக் கமிட்டி உறுப்பினரான அவர் பெண்ணிய விடயங்களில் குறிப்பாக பெண்களின் சுகாதார, மறுஉற்பத்தி உரிமையில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர்.

சமீப காலமாக கருக்கலைப்பு உரிமை உள்ளிட்ட பெண்களின் சுகாதார உரிமைகள், மறு உற்பத்தி உரிமைகள் பற்றிய விடயங்கள் அதிகளவு பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ்ச் சூழலில் இது குறித்த கருத்தாடல்கள் போதுமானதாக இல்லை. மேலும் எனது உடல் எனக்கே சொந்தாமானது அதை தீர்மானிக்கும் உரிமையும் எனக்குரியதே எனும் கோஷமும் பெண்கள் அமைப்புகளால் பலமாக வலியுறுத்தப்பட்டு வரும் காலம் இது. இந்த நிலையில் இவை பற்றி உரையாட தேர்ந்த நபரென குமுதினி சாமுவேல் அவர்களை தெரிவு செய்தோம்.எனது உடல் எனக்குரியது எனும் கோஷத்தை முன்னெடுக்கின்ற ஒரு வேலைத் திட்டம் குறித்து அண்மையில் இலங்கை அரசு சார்பற்ற பெண்கள் கூட்டமைப்பினால் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அது பற்றி விளக்குவீர்களா?

அதை இந்த வருட இறுதிப்பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அந்த கலந்துறையாடலில் இவை பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைக்கு எப்படிப்பட்ட கோஷங்களை உருவாக்கி பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது குறித்து மட்டும் தான் கலந்துரையாடினோம்.

பெண் உடல் மீதான ஆணின் அதிகாரம், மற்றும் அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான புனைவுகள் பற்றி?
பெண்ணின் உடல் பற்றி எடுத்துக்கொண்டால் சிறு வயது தொடக்கமே அவளது உடல் பற்றிய தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். பெண்ணின் மாதவிடாய் தொடங்கும் காலம் தொட்டு, திருமண கால மாதவிடாய் வரை எமக்கு கற்பிக்கப்படுபவை, எமக்கு கற்பிக்கப்படாதவை பற்றி முக்கியமாக அவதானித்துப் பாருங்கள். சுகாதார விடயங்கள் பற்றி தாய்மார் பேசுவதற்கு வெட்கப்படுகின்றனர். தந்தை மார் அது பற்றி பேசுவதே கிடையாது. இப்படியான நிலையில், ஒன்றில் நன்பிகள் மூலமாகவோ அல்லது சில நூல்களினூடாகத் தான் பெரும்பாலும் தெரிந்து கொள்கிறோம். இவற்றிற்கூடாக பெரும்பாலும் எமக்கு வந்து சேர்பவை தவறானவையாக இருந்து விடுகின்றன.

இன்று தமிழ், சிங்கள கலாச்சாரத்தில் காணப்¬படுகின்ற ”பெரிய பிள்ளையாதல்” என்பது வெறும் ”சடங்கு” ஆகவே கொள்ளப்படுகிறது. அதன் போது பெண், திருமணத்துக்கு தயாரானவள் என்பதை உலகத்துக்குத் தெரியப்படுத்த சிகப்பு உடுத்தி ஒரு கண்காட்சியையே நடத்தி விடுகிறோம்.

ஒரு வருடத்துக்கு முன் யாழ்ப்பாணம் சென்றி¬ருந்த போது ஒரு நிகழ்ச்சியை அவதானித்தேன். எனது நன்பி ஒருவாpன் உறவினர்கள் அவுஸ்தி¬ரேலியாவில் இருந்து வந்திருந்தார்கள். விசாரித்¬ததில் தனது பிள்ளைக்கு சாமத்திய சடங்கை நடத்துவதற்காக யாழ் அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது. இத்தனை பிரச்சினைகளின் மத்தியில் நடத்தத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி என்னை ஆச்சிரியப்படுத்தியது. சாமத்திய சடங்கு பற்றிய மரபான முறையை கவனித்தோமானால், மாதவி¬டாய் முதல் தடவையாக வெளியேறுகிற சந்தர்ப்¬பத்தில் ஆண்களின் பார்வையிலிருந்து விலக்கி வைத்து, நேரம் பார்த்து, குறிப்பிட்ட தினத்தில் நீராட்டி, கடவுளை வணங்கச் செய்து, பகிரங்கமாக உறவினர்கள், நண்பர்கள் பார்வையின் முன் கொண்டு வருவார்கள். இது முதலாவது சந்தர்ப்¬பத்தில். ஆனால் 12 தடவைகள் (12 மாதங்கள்) மாதவிடாய் வந்தபின்னும் கூட இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இதன் காரணம் அதில் ”வாடிக்¬கையாளருக்கு” அறிமுகப்படுத்தும் நோக்கமும் திருமணத்துக்கு தகுதி பெற்று விட்டாள் என்கின்ற செய்தியை தெரியப்படுத்துவதுமே உள்ளார்ந்து இருக்கிறது.

வயதுக்கு வந்ததும் ஆண்களுடன் சேரக் கூடாது, பேசக்கூடாது, பழகக் கூடாது என வீட்டார் நிபந்தனை விதிப்பார்கள். திருமண காலங்களில் கூட எமது சம்பிரதாயங்களில் திருமணம் பற்றியோ குறைந்தது பாலியல் விடயங்கள் பற்றி கூட விளக்கமளிப்பதில்லையே. திருமணமான பழையவ¬ர்களைக் கேட்டால் தம¬க்கு அந்த முதல் இறவின் போது நடந்தவை பற்றி ஆச்சரியமாக இருந்தாகக் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் சிறியானி பஸ்நாயக்க செய்திருந்த ஆய்வொன்றில், மண¬மா¬காத பருவ வயது இளம் ஆண், பெண்கள் மத்தியில் பாலுறவு செயற்பாடுகள் அதிகாரித்து வருவதாகத் தெரிவி¬த்துள்ளார். அது மட்டு¬மன்றி இளம் சந்ததியினர் மத்தியில் இன்று பாலியல் விடயங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. ஆனால் மறு உற்பத்தி சுகாதாரம் என்றால் என்ன என்பது குறித்த முறையான விளக்கம் அவர்கள் மத்தியில் கிடையாது.
சுகாதாரம் மறு உற்பத்தி குறித்த விடயங்கள் பெருமளவு பெண்ணின் உடல், பாலுறவு என்பவற்றோடு ஒட்டியல்லவா பேசப்படுகிறது?


மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய விடயங்கள் பரந்துபட்டது. பாலியல் ஈடுபாட்டின் போது கருக்கட்டப்படலாம். பாலுறவின் போது கருக்கட்டலை தவிர்க்க வேண்டுமாயின் எப்படிப்பட்ட முறையில் தவிர்ப்பது என்பது பற்றிய விளக்கம் பெரும்பாலும் கிடையாது. கருக்கட்டலை தவிர்க்கின்ற வகையில் பாதுகாப்¬பான பாலுறவு கொள்வது எப்படி என்பது பற்றி திருமணமானவர்கள் சாதாரணமாக வைத்தியர்க¬ளின் ஆலோசனையைப் பெறலாம். திருமண¬மாவதற்கு முன்னர் ஆணும், பெண்ணும் பாதுகாப்பான பாலுறவு கொள்ள ஆலோசனை பெறுவதற்கு பெரும்பாலும் முடிவதில்லை.....

இரண்டாவது, பாலுறவின் போது ஏற்படக்¬கூடிய நோய்கள் பற்றிய எச்சரிக்கை கொள்ள வாய்ப்பில்லை. பாலியல் சார்ந்த நோய்கள் உள்ள¬வர்களை சமூகம் ஒழுக்கவியல் விவகாரமாகவே (moral) பர்க்கிறது. அவர்கள் பாவம் செய்தவர்¬களாகவும், ஊழ்வினைப்பயனை அனுபவிப்¬பவர்கள் என்றும் கருதுகிறது. அவ்வாறான நோய்களை தவிர்க்கும் முறைகள் பற்றி எமக்குத் தெரிவதில்லை. இன்று அதையும் விட எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி குறைவாகவே பேசப்படுகிறது. இலங்கையில் பெரும்பாலானோர் எமது நாட்டில் அப்படியொன்றும் பெரிதாக இல்லை எனக் கூறிக்கொள்கின்றனர். பேசவே விருப்பமில்லாத விடயமென்பதால் அப்படியொன்று இல்லை¬யென்று ஒளிக்கவே விரும்புகிறோம்.

இன்று போர்ப் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் அங்கு இளம் - ஆண்கள் படையில் பெருமளவாக உள்ளனர். சாவிலிருந்து தப்பி, விடுமுறையில் திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உணர்ச்சிகளைத் தணிப்பதற்காக பெண்களைத் தேடிக்கொண்டு செல்வார்கள். இன்று அனுராதபுரத்தில் பாரியளவில் விபச்சாரத் தொழில் நடந்து வருவது எம்மெல்லோருக்கும் தெரியும். எல்லைப் புறங்களிலும் இது தான் நிலைமை. மேலும் படையினர் அதிகமாக நடமாடும் இடங்களில் பெண்கள் பழியாக்கப்படுகின்றனர்.

விருப்பத்துடனோ விருப்பமி¬ன்றியோ இவை நடக்கின்றன. பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. படையினர் சூழ உள்ள பிரதேசங்களில் படையினரின் பாலியல் தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அப்படி¬யான பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பான பாலுறவு, கருக்கட்டல் தவிர்ப்பு, சுகாதாரங்கள், பாலியல் நோய்கள் என்பவை பற்றி அக்கறை காட்டப்படுவதே இல்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை. படையின¬ருக்குக் கூட இது குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகிறதா என்பது தெரி¬யாது. அவர்கள் உறவு கொள்ளும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்¬களா?

சிலர் ஆணுறை மாத்திரம் பாவிக்கின்றனர். ஆனால் பெருமள¬வான ஆண்கள் ஆணுறையைப் பாவிக்க விருப்பப்படுவதில்லை. திருமணமான கனவனைக் கூட எமது பெண்கள் ஆணுறை பயன்படுத்து¬மாறு வலியுறுத்தும் வழக்கம் இல்லையே. அவ்வாறான சந்தர்ப்ப¬ங்களில் வழமைபோல ஆணின் அதிகாரம் தான் அதையும் தீர்மானி¬க்கிறது. எனவே பெண்களின் உடலைப் பாதுகாப்பதற்கான வாய்ப்¬புகள் இல்லை. இவை அனைத்தும் பெண்களின் மறு உற்பத்தி உரிமைகளுடன் தொடர்புடையவை.
பொதுவாக இவை குறித்த விழிப்புணர்வுகள் போதுமானதாக இல்லையே?


சமீப கால தரவுகள் படி குடும்பக் கட்டுப்¬பாட்டுத் திட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அதிகம் என்று கூறுகின்றன. ஆனால் அது தற்போது குறைந்து வருவதாக சில மருத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர். குடும்பத்திட்டம் பற்றிய கருத்தூட்டல் நிகழ்ச்சிகள் இலங்கையில் எந்தளவு தூரம் மக்களை அடைகிறது என்பது தொpயாது. இல்லாமல் போனால், கருக்கட்டல் வரையறையில்லாமல் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தற்போது திருமணமாகின்ற வயதும் அதிகரித்து வருகிறது. பெண்களாயின் அது 26-28 ஆகிறது என்றும் ஆண்களாயின் 30 அல்லது அதையும் தாண்டுகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே திருமணமா¬வதற்கு முன்னர் பாலுறவுக்கான வாய்ப்புகள் உண்டு. அதை விட திருமணமான பின்னர் வேற்று பாலுறவுக்கான வாய்ப்புகளும் உண்டு. இதைவிட எமது சமூகத்தில் கனவரிழந்தவர்களின் தொகை குறிப்பிடத்தக்க அளவு உண்டு. வடக்கிலும், தெற்கிலும், உள்ளனர். இவர்களுக்கு பாலியல் தேவைகள் இல்லையா? அல்லது அவர்கள் பாலுறவுக்கோ, பாலியல் வல்லுறவுக்கோ உள்ளாக மாட்டார்களா?

சம்பிரதாய எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் எமது சமூகத்தில் பாலுறவுகள் நடைமுறையிலி¬ருக்கின்றன. நாங்கள் அதனை பிற்போக்குத் தனமாக உணர்ச்சிவசப்பட்டு மட்டும் பார்ப்போ¬மானால் எம்மால் பிரச்சினைகளை அடையாளம் காணவும் முடியாது. அதனை தீர்க்கவும் முடியாது. யதார்த்தம் என்ன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நவீன சமூகத்தில் இந்த யதார்த்தத்தைத் தடுக்க முடியாது. எனவே நாம் இது விடயத்தில் எடுக்கக்கூடிய ஒரு ஒரே வழி பெண்களைப் பாதுகாப்பது. அதற்கு எமக்கு தகவல்கள் தேவை. பாலுறவுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகள் தேவை. கருக்கட்டல் எவ்வாறு இடம்பெறுகின்றது. கருக்கட்டல் அவசியமில்லையெனில் அதற்கேற்றவகையில் பாலுறவு கொள்வது எப்படி, அதையும் மீறி கருக்கட்டப்பட்டால் அதை பாதுகாப்பான முறை¬யில் கருக்கலைப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு, திட்டமிடல் அவசியம். மத்திய தர வர்க்கத்தினருக்கு இவ்விழிப்புணர்வுகளுக்கான வாய்ப்புகள் அதிகம். வறுமை மிகுந்த, கிராமிய, மற்றும் தொழிலாள, விவசாய பிரிவினருக்கு இந்த வாய்ப்புகள் எட்டுவதில்லை. அவர்களைப் போய் இந்த விழிப்பூட்டல்கள் போய் சேருவதில்லை, அல்லது வெட்கம் காரணமாக அவர்கள் பின்வாங்குகின்றனர். இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. மலையகத்¬திலும் இந்த நிலமை இருக்கிறது. மலையகத்தில் பெரும்பாலும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்.
இன்று கருக்கலைப்பு உரிமை பற்றிய விவாதம் சூடு பிடித்து வருகிறது. அதற்கென்ன காரணம்?


இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவிலும் தாய்மையைப் பாதுகாப்பது (safe motherhood) என்ற ஒரு காரணத்துக்காக மாத்திரம் தான் கருக்கலைப்பை செய்து கொள்ளளாம் என்கின்ற கருத்து உள்ளது. அதனடிப்படையிலேயே சட்டங்களும் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்துக்கு விரோதமான ஒன்று. உங்களுக்குத் தெரியும் இன்று இலங்கையில் நாளொன்றுக்கு 750க்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக ஐ.நா.வின் தகவல் கூறுகின்றன. இதன் போது தாய்மார் 5-6 வீதம் வரை மரணிக்கின்றனர். இதன் பின்னராவது நாம் பெண்களைப் பாதுகாப்பதா இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், கருக்கலைப்பு ஒரு உயிர்க் கொலை, பாவம் என்கின்ற கருத்தாக்கத்திலிருந்து தொடங்கினால் உயிருடன் இருக்கிற தாயின் உயிர், ஆரோக்கியம், எதிர்காலம் குறித்த முறையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கருக்கலைப்பை சட்ட ரீதியில் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான ஆரோக்கியமான வசதிகளையும் ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு. பெரும்பாலும் கருக்கலைப்பைத் தீர்மானிக்கும் போது ஆணும் பெண்ணு¬மாக உடன்பட வேண்டும் என்றும் கூறி வருகிறா¬ர்கள். ஆனால் கருவை சுமப்பதும், அதன் விளை¬வுகளை சந்திப்பதும் பெண் என்பதால், குறித்த தீர்மானமெடுப்பதில் பெண்ணுக்கே முன்னு¬ரிமை இருத்தல் அவசியம். விவாகத்துக்குப் புறம்பான பாலுறவு அதிகமாக இருக்கிறதென்று எமது புள்ளிவிபரங்களே கூறுகின்றதென்றால், படையினரின் பாலியலு¬க்கு பலியாகும் பெண்க¬ளின் எண்ணிக்கை அதிக¬ரிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றதென்றால் அதனால் ஏற்படும் கருவை கலைப்பதாயின் அந்த ஆண்களைத் துணைக்கு கூப்பிட முடியாது. எனவே, பெண்ணின் தனிப்பட்ட தீர்மானத்துக்கு வழி சமைக்க வேண்டும். பெண்கள் இந்த விடயத்¬தில் பொறுப்பற்ற தீர்மா¬னத்தை எடுப்பதில்லை. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டால் சகலரும் குடும்பத்திட்ட முறைகளை கைவிட்டுவிட்டு கருக்கலைப்பை நோக்கிச் செல்வார்கள் என்கின்ற நம்பிக்கை எமது நாட்டவர் மத்தியில் உண்டு. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கப்¬பட்டதன் பின்னர் அங்கு கருக்கலைப்பின் தொகை முன்னரை விட அதிகளவில் குறைந்திருக்கிறது. இப்படி உதாரணமாக பல நாடுகளைக் காட்டலாம்.
எப்படி அது சாத்தியமானது?


கருக்கலைப்பு சட்டபூர்வமாக்¬கப்பட்டதோடு கூடவே முறையான குடும்பத்திட்ட சேவைகள், தகவல் பிரச்சாரங்கள், விளக்கமளிப்பு ஆலோசனைச் சேவைகள் என்பவை¬யும் செய்யப்பட்டன. அதற்கென்று கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்டால் இங்கும் கருக்கலைப்பு குறையுமென்றே நான் நம்புகிறேன். இலங்கையில் ஏற்கெ¬னவே குடும்பத்திட்ட சேவை இருக்கிறது. கருக்கலைப்பு சட்டபூர்வ¬மாக்கப்பட்டால் அதற்கொன்று கொள்கைவகுப்பு, வேலைத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டிவரும். அப்படி செய்யப்பட்டால் இந்த குடும்பத்திட்ட சேவையும் மறுசீராக்கம் செய்து அதிகப்படுத்த வேண்டிவரும்.
கருக்கலைப்பு தொடர்பான பொறுப்பு வாய்ந்த ஆட்சி அதிகார தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து...?


1995இல் பாராளுமன்றத்துக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்த கருக்கலைப்பு பற்றிய சட்டசீர்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி சூழலில் ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டாலோ, அல்லது அசாதாரணமான நிலைமைகள் இருந்தாலோ அந்த கருவை கலைக்கலாம் என்கின்ற திருத்தங்களை உள்ளடக்க முயன்றார். ஆனால் அதனை கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் மத நிலைப்பாடுகளிலிருந்து பலர் எதிர்த்ததால் அச்சட்டமூலம் திருத்தப்படவில்லை. அமைச்சர் அதனை வாபஸ் வாங்க வேண்டி வந்தது. ஆனாலும் இறுதியில் அவர், இறுதியில் கருக்கலைப்பு பற்றி சட்டத்தில் பேசாது விடுவோம். அதையாவது செய்வோம். அதனை சட்டத்துடன் சேர்க்கத் தேவையில்லை. அது ஒரு மருத்துவம் பற்றிய விடயம். எனவே ஆஸ்பத்திரியில் சாதாரண நோய்களைப் போல இதனையும் செய்ய வாய்ப்பு கிட்டும் என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு முன்னை¬யதை விட அதிகளவு எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் அவர் இச்சட்ட மூலத்தை மீண்டும் கொண்டுவர தான் முயற்சிப்பதாகக் கூறினார். அனால் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்க¬ளுடன் முறையான புரிந்துணர்வை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படமையினால் இன்று வரை அதில் வளர்ச்சி எதுவும் இல்லை.

இது அவரது கடமை அல்லவா என்று விட்டுவிட முடியாது. பாராளு¬மன்றத்துக்கு மீண்டும் கொண்டு வரும்படி கோரி நிர்ப்பந்திக்க சில நிறுவனங்கள் உள்ளன. மகளிர் விவகார அமைச்சு, குடும்பத்திட்ட, சுகாதார நிறுவனம், தேசிய பெண்கள் கமிட்டி, பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் குழுக்கள் இவைகளால் அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். சட்டத்துறையினர் மத்தியிலும் இதற்கு ஆதரவு இருக்கிறது. பொலிஸார் மத்தியிலிருந்தும் தற்கு ஆதரவு இருக்கிறது. ஏனெனில் சுற்றி வளைத்து சோதனை செய்வது கைது செய்வது என்பவற்றை இவர்களே செய்கின்றனர். சில இடங்களில் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். கருக்கலைப்பை ஆரம்பத்திலேயே செய்ய முடியாத¬வர்கள் குழந்தையை பெற்றுக் கொண்டதும், மலசல கூடங்கள், வாய்கால், குப்பைத் தொட்டிகள், காண்கள் என்பனவற்றில் போட்டு விட்டுப் போகும் சந்தர்ப்பங்களையும் அவ்வப்போது செய்திகளில் காண்கிறோம்.

அமைச்சர் கொண்டு வந்த சட்டமூலத்தை தயாரிக்கும் போது அதில் பெண்கள் அமைப்புகள் பல சம்பந்தப்பட்டிருந்தன. பெண்கள் அமைப்புகள் என்கின்ற ரீதியில் நாங்கள் செய்ய வேண்டியது திர்மானமெடுக்கும் தரப்பிலுள்ளவர்களை எமது இலக்கை நோக்கித் தள்ளச் செய்வதே. இது வரை அப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டது கிடையாது. இதைச் செய்வது எம்மெல்லோரினதும் கடமை. இது வரை ஒரு மனித உரிமைகள் அமைப்பாவது பெண்களின் பிரச்சி¬னையொன்றுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டதில்லை. பெண்களின் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினை¬யாக கருதுவது கிடையாது.

பெருமளவான தொடர்பு சாதன¬ங்கள் கூட இதனை எவ்வாறு செய்திப்¬படுத்துவது என்பது குறித்த விழிப்¬புணர்வு கிடையாது. ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு குறித்து செய்தியிடுகின்ற வேளை மறுபுறம், ”கருவிலேயே கொலை” என்று கருக்கலைப்பு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பும் வேலைகளும் செய்யப்படுகின்றன.

ஆணுக்கு தேவைப்படுகிற போது பிள்ளை பெற்று கொடுப்பதற்கும், ஆணுக்குத் தேவையற்ற நேரத்தில் குழந்தையை தவிர்ப்பதற்கும் பெண், இயந்திரம் அல்லவே.

குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்குத் தான் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழும் வாய்ப்பு தான் இருக்கிறதா? அந்த தாய்க்குத் தான் நிம்மதியாக வாழும் வாய்ப்பு உண்டா? அவள் அதன் பின்னர் இந்த சமூகத்தின் பார்வையில் நடத்தைக் கெட்டவளா¬கவும், வேசி என்றுமல்லவா அழைக்¬கிறது? இப்படி பிறந்த பின்னர் நிம்மதியாக வாழ விடாத சமூகம் தான் அதே குழந்தை பிறக்கவிடாமல் செய்வதற்கு எடுக்கும் முயற்சியின் போது இது உயிர் என்று கத்துகிறது.

சகலரும் இது விடயத்தில் இப்படி சிந்தியுங்கள், தங்களின் மனைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, சகோதாpக்கு இப்படி நேரிட்டால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?
இது சுற்றி சுற்றி கற்பு குறித்த மரபார்ந்த கருத்தியல், ஐதீகங்களையல்லவா மையப்படுத்தி நிற்கிறது?
அது தான் உண்மை. கற்பு குறித்த ஐதீகம் பெண்ணின் உடல் மீதான ஆணின் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கற்பை பாதுகாத்தல் என்கின்ற விடயம், பாலியலை சுதந்திரமாக பெண் பாவிக்க முடியாது என்கின்ற கருத்துநிலை, அது கட்டிய கணவனுக்கு மட்டுமே ஏனைய பண்டஙகளைப் போல சொந்தமானது, கற்பு புனிதமானது, தூய்மையானது என்கின்ற புனைவுகளை சுற்றிக் கட்டப்பட்டது. இந்த தூய்மையை, புனிதத்தை தனது ஆணுக்காக, கணவனுக்காக ”கெடாமல்” காக்க வேண்டும். குடும்பக் கட்டமைப்பின் இருப்புக்கும் கூட, குறிப்பிட்ட குழந்தையின் தந்தை தானே தான் என்று உறுதி செய்யும் வகையிலமைந்த இந்த கற்பு குறித்த கட்டுப்பாடுகள் சுமத்தப்¬பட்டுள்ளது. இது மீறலுக்குள்ளாக்¬கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் ”வேசி” என்கின்ற பழிச்சொல் சுமத்தி, அவமானத்துக்குள்ளாக்கி, தலைகுனி¬வுக்குள்ளாக்கி கற்பு குறித்த பயம் திணிக்கப்படுகிறது. பெண்ணின் பாலியலை, உடலை கட்டுப்படுத்¬துவதில் ஆணாதிக்கம் எப்போதும் குறியாகவே இருந்து வருகிறது. பெண்ணின் மீதான அடக்குமுறையின் அடிப்படையே பாலியலிலிருந்து தொடங்குவதாகவே எனக்குப்படுகிறது. கற்பு பற்றிய மாயைகள் ஏற்படுத்தி¬யிருப்பதும் அதற்காகத் தான். விவாகத்தக்குப் புறம்பான பாலியலுக்கு இடமில்லை என்ற நிபந்தனை பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருப்பதும் அதற்காகத்தான். கருக்கலைப்பு பற்றிய விதிகள் பெண்ணுக்கு ஏற்படுத்தியிருப்¬பதும் அதற்காகத் தான். பெண்ணுக்கு இவை குறித்த சுயநிர்ணய உரிமை கிடையாது. அடக்கப்படும் எந்த தரப்பினரும் இந்த சுயநிர்ணய உரிமை வேண்டியல்லவா போராடுகிறார்கள். அதே சுயநிர்ணய உரிமைக்காகவே பெண்ணும் போராட வேண்டியி¬ருக்கிறது. அதிகாரத்துவத்திற்கெதிராக போராட வேண்டியிருக்கிறது.

நேர்காணல்: என்.சரவணன்