மருத்துவம் பயிலும் மாணவியுமா
மாவிளக்கு போடுகிறாள் !
மதியிழந்து, மங்கலம் அமங்கலம்
என்னும் வார்த்தைகளை கூட
மதித்து நடக்கிறாள் !
வேலி போட்ட வேதத்துக்கு
வென்சாமர் வீசுவதும்,
வெள்ளை கமலத்துக்காரிக்கு
விரதங்கள் இருப்பதும்
வெற்றியை தந்திடுமென்றே
வெகு நாட்களாய் மரத்தை சுற்றும்
மங்கையரே !
ஆண்களும் நீங்களுமாய்
ஆரம்பித்து வைத்ததுதானே இந்த ஆட்டம் !
ஆதி பரமேஸ்வரியும்,
கன்னி மரியாளும் கடவுள்
என்பதாலோ கருவறைக்குள் ?
மாதமொருமுறை நீ மட்டும்
உன் வீட்டுச் சிறைக்குள் !
வேடிக்கையான வேஷம்தான்
இங்கே பெண் கடவுள்களுக்கெல்லாம்!
எஸ் .நிகிந்தன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.