புலவனும் பெண்மை இழிவும்

விடியும் வரை பெண்ணழகு
விடிந்த பின்னே?
என்ன இலவு !

காமத்தின் உருவமென்றே
காவியப் பெண்களை
(மேனகை -விசுவாமித்திரர் )
இவன் படைத்திடுவான்!

காவியத்து நாயகிகளைத்தான்
இந்தக் கவிஞர்கள்
விட்டதுண்டோ
காம ரசம் ஊற்றாமல்!



முன்னழகையும்
பின்னழகையும்
புகழ்ந்தெழுதியே
பேர் வாங்கின புலவர்கள்
அல்லவா !

புதிதாய் என்ன காவியம் படைத்தார் ?
பூவையர் பூஜைக்கு போவதையும்
பூகம்பம் ஆவதையும் தவிர.


பெண்ணையும்
மண்ணையும்
போற்றிடுவோம் என்று
பாடிப் பாடியே
பண்பற்றவராகிப் போனாரே
நம் புலவரெல்லாம் !


                      எஸ். நிகிந்தன்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.