ஆணாதிக்கமும் பெண் அடிமைத்தனமும்


வள்ளுவனுமல்லோ சொல்லிப் போனான் 
ஆணைத் தொழுது நீ வாழ வேணுமென்று !

ஆணுக்கு எதை சொல்லி சொல்லிப் போனான் !

சொன்னவரெல்லாம் ஆண்கள் என்பதனாலே
ஆளுக்கொரு கவிதை பாடி அடக்கி விட்டனர்
அவள் என்னும் அறிவியலை !

விவிலிய பிதாவானவர் 
அவன் விலாவெலும்பைக்கொண்டே
அவளை உருவாக்கினாராம் !
அதிசயம்தான்!
ஏற்றுக் கொள்ளும் பெண்கள்
இன்னமும் இருக்கும் வரை !

அவனுக்கு வீரமும்
அவளுக்கு அன்புமாம்
புலவர்களின் புலமை இங்கே !
அன்பை முதன்மையாய்க் கூறும் மதங்களிலோ
அவளுக்கு முதல் இடம் எங்கே  ?
  
தாய் நாடு என்று சொல்லியும்
நதிகளுக்கு பெயர் சூட்டியும்
ஆண் பெண் சமத்துவம் காட்டும்
ஆதிப் பெரியவர்களின் வழியே
வந்தவரல்லோ நாமெல்லாம் !

அதைத்தானே சொல்லி சொல்லி
பெருமையடைவோம் !

                                                                         
             எஸ் .நிகிந்தன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.