Sunday, September 4, 2011

ஒரு மாணவி உயிரின் விலை ரூபாய் 4000 ?



கடந்த ஜன 29 அன்று 4000 ரூபாய் காணாமல் போன விவகாரம் குறித்து வகுப்பில் உள்ள அணைத்து மனைவிகளிடமும் சாதாரணமாக விசாரித்த பேராசிரியைகள் திவ்யாவை மட்டும் தனியாக அழைத்து நிர்வனபடுதி சோதனை செய்ததில் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். இதனை அன்றே தன் தாயிடம் சொல்லி வேதனை பட்டுள்ளார். நேற்று முன்தினம் Feb1 மீண்டும் கல்லூரிக்கு சென்ற திவ்யாவை சக மாணவிகள் கேலி செய்ததாக கூறபடுகிறது. இதனால் கடும் மனுளைச்சளுக்கு உள்ளான திவ்யா ‘மானம் போன பின் உயிர் வாழ்வதேன்’ என எண்ணி வீட்டிக்கு வந்து யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கு போட்டு இறந்துள்ளார்.

சாவதற்கு முன் தன் பேராசிரியருக்கு எழுதி உள்ள கடிதத்தில்..”மதிபிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு..நான் இந்த கல்லூரியில் B.com(c.s) மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். கடந்த 29ம் தேதி என் வகுப்பரையில் பணம் திருடு போய் விட்டது. அதற்காக ஆசிரியர்கள் எல்லோரையும் விசாரித்தார்கள் அனால் என்னை மட்டும்…….” என அதற்கு மேல் எழுட முடியாமல் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.மறுநாள் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவிகள் இந்த செய்து கேட்டு அழுதபடி வீட்டிக்கு திரும்பினர். போராட்டம், சாலை மறியல், காவல் நிலையம் முற்றுகை, தற்கொலை தூண்டுதலுக்கு காரணமான 4 பேராசிரியர்கள் IPC 306 சட்டத்தில் கைது என சம்பர்தயங்கள் நடந்தேறி உள்ளது.

இந்த சம்பவம் நமக்கு முன் வைக்கும் சில அடிப்படை கேள்விகள்:
1) அணைத்து மாணவிகளிடமும் சாதாரணமாக நடத்திய பேராசிரியைகள் திவ்யாவை மட்டும் நிர்வனபடுத்தி விசாரிக்க காரணம் என்ன???
அவர் பெசன்ட் நகர் ஆல்காட் குப்பத்தை சேர்ந்த பெண், அவள் அப்பா watchman, அம்மா சாஸ்திரி பவனில் துப்புரவு வேலை செய்பவர். ஏழ்மையான குடும்ப பின்னணியை சேர்ந்தவர் தன் திருடி இருக்க முடியும் என்கிற வர்க்க ரீதியான சிந்தனை (CLASS /CASTE DRIVEN STEREOTYPICAL BEHAVIOR) தான். இவர்கள் மட்டும் அல்ல நுனிப்புல் மேய்ந்துவிட்டு சமுக மேம்பாடு பற்றி பேசும் சில Corporate கனவான்களிடமும் இதே சிந்தனையை நீங்கள் பார்க்க முடியும்.
2) இந்த சோக சம்பவம் நடை பெறாமல் தடுத்திருக்க வைப்பு எதாவது உள்ளதா?
மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசி தீர்த்து கொள்ள, ஆலோசனை பெற பள்ளி கல்லூரிகளில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு அமைப்பு Student COUNSELING . மாணவர்கள் உளவியல் அறிந்த PSYCHOLOGICAL COUNSELOR அந்த கல்லூரியில் இருந்திருந்தால் இந்த திருட்டு பிரச்சனையை அணுக வேண்டிய முறையை பட்ட மேற்படிப்பு படித்த அந்த அறிவு ஜீவி பேராசிரியர்கள்…கவுன்சலரிடம் கேட்டிருந்தால் இந்த பிரச்சினையே உருவாகி இருக்காது. ENGINEERING கல்லூரிகளில் மாணவர்களை நடத்தும் முறை பற்றி சொல்லவே வேண்டாம்..திவ்யா தனது மன உளைச்சலை கவுன்சலரிடம் பகிர்ந்திருந்தால் இன்று நாம் திவ்யாவை இழந்திருக்க மாட்டோம்.

சம்பவம் நடை பெற்ற அன்று உடல்நலம் சரி இல்லாத அப்பாவை பார்த்துக்கொள்ள அம்மா சென்றுவிட்டதால், திவ்யாவின் தனிமை தற்கொலைக்கு மேலும் தூண்டுகோலாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறன்.
3) தவறு செய்த அந்த 4 பேராசிரியர்களை தண்டிப்பதனால் இந்த பிரச்சனை தீருமா?
தற்கொலை தூண்டுதலுக்கு காரணமான 4 பேராசிரியர்கள் IPC 306 சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளது எந்த வகையிலும் இந்த பிரச்சனையின் மூல காரணத்தை தீர்க்க உதவ போவதில்லை. இதற்கு Student COUNSELING கட்டாயமாக அமுல்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வு.
அதிகார அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்….
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் Student COUNSELING என்ற அமைப்பே இல்லை என்கிறது புள்ளிவிவரம். பல கல்வியாளர்கள் கல்வி என்பதே சமுக பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதன் நோக்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் இன்று கலை/அறிவியல் கல்வி என்பது பெரும்பாலும் அழிந்து CORPORATE நிறுவனங்களுக்கான PRODUCT ஆகவே மாணவர்கள் உற்பத்தி செய்கிறோம். முன்பு எப்போதையும் விட இப்போது மாணவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், உளச்சிக்கல்கள் அதிகம் என்று நிபுணர்கள் எச்சறிகிரர்கள்.
ஆனால் இவை ஏதும் நம் மாண்புமிகுகளின் காதுகளுக்கு கேட்கவே மாட்டேன்கிறது. His EXCELLENCY சுர்ஜித் சிங்க் பர்னால அவர்களே…மரக்கன்று நடுவது, மலர் பூங்கா திறப்பது மட்டும் தான் உங்கள் பனியா? தமிழ் நாட்டின் அணைத்து பல்கலைகழக வேந்தர் என்ற முறையில்..நீங்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதோடு நிறுத்திகொல்லாமல் ….STUDENT COUNSELOR அணைத்து கல்லூரியிலும் தேவை போன்ற ஆலோசனைகளையும் துணை வேந்தர்களுக்கு வழங்குமாறு வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு துணை வேந்தர் Dr. திருவாசகம் அவர்களே..கதர் ஆடை விற்க மட்டும் தான் சென்னை பல்கலைகழக மாணவர்களை நோக்கி வருவிர்களா?? தொடர்ந்து நடக்கும் இந்த தற்கொலைகளை உங்கள் காலத்திலாவது தடுத்து நிறுத்த SYNDICATE கூட்டம் போட்டு அணைத்து கல்லூரிகளிலும் STUDENT COUNSELOR நியமிக்க ஒரு ஆணை பிறப்பிக்க கூடாதா??
மாணவர்கள்/ பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்….
ஒரு கல்லூரியில் சேரும் போது INFRASTRUCTURE நல்லா இருக்கா, LAB FACILITIES நல்லா இருக்கா, CAMPUS INTERVIEW இருக்கா என்று பார்த்து பார்த்து சேரும்/சேர்க்கும் நீங்கள் அந்த கல்லூரியில் Student COUNSELOR இருக்கிறரா என்றும் பார்த்து சேரவும்..அப்படி இல்லை என்றல் demand செய்யவும்…EDUCATION என்பது MARKET DRIVEN ஆகா இருக்கிற இந்த காலத்தில் நிர்வாகம் இந்த கோரிகையை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்…இல்லாவிட்டால் இன்று திவ்யாவுக்கு நேர்ந்தஹு நாளை உங்களுக்கும் நேரலாம்..எச்சரிக்கை….!!!!

வருத்தங்களுடன்….
தினேஷ்.


நன்றி தடாகம்.கொம்
Saturday, February 26, 2011 @ 11:28 PM

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.