Friday, May 9, 2014

பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது


எத்தனைபேருக்கு தெரியும் இந்த கொடுமை ?? அன்று குமரி மண்ணின் மைந்தர்களை( இன்று இந்து என கூறி கொள்ளும் மதம்) அடிமை படுத்தியது!! உறவுகளே சிந்தியுங்கள்!!

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று.

இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான்(சாணார் ,புலையர் ,.....) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக்

கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.

சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

தாலி அறுத்தான் சந்தையில் மேலாடை அணிந்து சென்ற பெண்களின்,தாலி அறு தெறிந்தும் ,மேலாடைகள் கிளிதெறிந்தும், மார்பகங்கள் வெட்டி விசப்பட்ட கொடுமைகளும் எத்தனை பேருக்கு தெரியும் ?